Author: பதாகை

அஞ்சலி

ஹரன் பிரசன்னா 

ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
வழித்தடம் அழுத்தமாகப் பதித்த காலங்களில்
அவரை நான் சபித்திருந்தேன்
கருத்துக் கலவரங்களில் அவர் எப்போதும் வாளேந்தி வருவார்
நான் நேர்மை மட்டும் தாங்கித் தோற்றிருக்கிறேன்
நியாயங்களில் அவருக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை
தன் நோக்கொன்றே சரியானது என்று உறுதியாக நம்பினார்
ரத்தம் கண்டு நான் மிரண்ட சமயங்களில்
புத்தனின் புன்னகையுடன் அவர் மேலேறிப் போனார்
எங்கோ உயர்ந்த புள்ளியில்
சூரியனுக்கு அருகில்
வெற்றிச் செருக்கில் என்னைத் திரும்பிப் பார்த்தபடி
சட்டென ஒருநாள்
ஒற்றையிலையென அவர் உதிர்ந்தார்
அவருக்கும் எனக்குமான நினைவுகளில் உழன்றபடி
சுண்டிப் போன ரத்த விரல்களில்
அவர் விட்டுச் சென்ற அநீதிகளின் மேல் அமர்ந்து
இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்
மிகக் கவனமான
ஒரு அஞ்சலி

மொழியாக்கம்- மொழிகளைக் கடந்த வாசிப்பின் சாத்தியம்

akrphoto7_courtesy-ramanujan-estate_1

பொதுவாக நாம் மொழிபெயர்ப்பு கவிதைகள் சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்கப்பட வேண்டும், அல்லது, அவற்றின் அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்பது போல் நினைக்கிறோம். எனவே ஒரு மொழிபெயர்ப்பை அணுகும்போது அது மூல மொழியிலிருந்து வேறுபடுவதில் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்து விட்டதுபோல் பார்க்கிறோம் – நமக்கே நன்றாகத் தெரியும், இப்படிப்பட்ட பிழைபெயர்ப்புகளை ஓரளவுக்கு மேல் தவிர்க்க முடியாது என்று. இந்நிலையில், இந்த இழப்புகளிலிருந்து வேறு ஏதோ ஒன்றை மீட்பதற்கான வழியை நாம் காண இயலுமா என்ற கேள்வியை எழுப்புவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன். (more…)

கால்பந்தை கால்மணி நேரம் – இரு கவிதைகள்

கவிதைப்படுதல்

– ஸ்ரீதர் நாராயணன்

அகண்ட எழுபது இஞ்ச் டிவி திரையில்
கால்பந்தை கால்மணி நேரம் பார்த்துக்
கொண்டிருந்தபோதுதான் அந்தக் கவிதை
உள்ளே நுழைந்தது

அணில்பிள்ளை சாடி விளையாடுவது போல
புஜத்திற்கு புஜம் பந்தை
சறுக்கவிட்டு வேடிக்கை காட்டியது

சிசர்ஸ் கிக் அடிக்கும் வேலுநாயகம் அண்ணன்
பின்னாடியே ராமசந்திரனும், சத்தியமூர்த்தியும்
செத்துப் போன முத்துகுமாருக்கு சப்ஸ்டிடியூட்டாக
சாயபு டீக்கடைப் பையன் பிஜி
நெல்லைப் பெண்ணை ஆள்வைத்து
தூக்கிய கிளமெண்ட்
குலமங்கலத்திலிருந்து கருக்கலில் கிளம்பி
ஓடியே தமுக்கத்திற்கு வரும் பாலமுருகன்
என்று பட்டியல் போட்டது

முட்டைக் கண்ணன் பேரு பாரதியோ சாரதியோ
காலைச் சுற்றிச்சுற்றி வரும் குழந்தையை
தாக்காட்டுவது போல
தளுக்காக பந்தை உருட்டிப் போவான்.

பாழாய்ப் போன கவிதை ஆளை சொன்னால்
பெயரை மறக்கிறது. பெயரைச் எடுத்துக் கொடுத்தால்
ஊரை மறந்து தொலைக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன்
தலைமை தாங்கிய ஃபைனல்ஸில்தான்
செக்கானூரனி அமீது கவட்டைக்குள்
காலைக் கொடுத்து புரட்டிவிட
காலொடிந்து போய்
அத்தோடு கவிதையும் காணாமல் போனது

அகன்ற திரையில்
காலி மைதானம் மட்டும் எஞ்சியிருந்தது

oOo

கொண்டதும் கொடுத்ததும்

எஸ். சுரேஷ்

கால்பந்தை​க்​ கால் மணி நேரம் பார்த்துக்கொண்டு
மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த குரங்கு
அந்த சிறுவன் வருகை பார்த்து உஷாரானது

சிறுவன் கால்பந்தை நெருங்கும்பொழுது
மரத்தைவிட்டு நிலத்துக்குத் தாவி
கால்பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு
மரத்தில் ஏறி உச்சிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டது

கீழிருந்து வந்த அழுகைக் குரல் கேட்டு
“இந்த நாள் நன்றாக விடிந்தது,”
என்று சொல்லிக் கொண்டு உரக்கச் சிரித்தது குரங்கு.

கவியின்கண் 16 – குறைகளற்ற மலர்

எஸ். சுரேஷ்

ஒற்றை மலரை எனக்கு அளித்தான், நாங்கள் சந்தித்தபின்.
மென்மையான ஒரு தூதுவனை அவன் தேர்ந்தெடுத்தான்;
ஆழ் இதயம், தூய்மை, ஈரம் காயாத பனித்துளியின் நறுமணம்-
குறைகளற்ற ஒற்றை ரோஜா.

மலர்களின் மொழியை நான் அறிவேன்;
“மெல்லிய என் இதழ்களில் போதிந்திருக்கும், அவன் இதயம்”
எப்போதோ காதல் தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்ட சின்னம்
குறைகளற்ற ஒற்றை ரோஜா.

இதுவரை ஏன் ஒருவரும் எனக்கு
குறைகளற்ற ஒரு லிமோ அனுப்பியதில்லை|
இல்லை, என் அதிர்ஷ்டம் எப்போதும் எனக்குக் கிடைப்பது,
குறைகளற்ற ஒற்றை ரோஜா

– டார்தி பார்க்கர் (more…)

வளர்முகச் சாலை

 

news of the day

கான்க்ரீட் ஓரங்களில்​ ஒளிரும் கனவுகள்

 

ஒளிப்படம் –  விக்டர் லிங்கன்