நான் படித்த பள்ளியில் சீருடையாக காக்கி நிஜாரும் வெள்ளை சட்டையும்தான் இருந்தது. ஏனோ அந்த காக்கி கால்சட்டையை அணியவே பிடித்தம் இருக்காது. அக்கம்பக்கத்து பள்ளிகளில் அடர்நீலம், பழுப்பு வண்ணம் கொண்ட சீருடைகள் எல்லாம் பார்த்து ஏக்கமாக இருக்கும். ஏன்தான் இப்படி ஒரு நிறத்தை சீருடையாக தேர்ந்தெடுத்தார்களோ என்று பெரும் கோபம் கோபமாக வரும். ஆனால், ஒன்பதாம் வகுப்பில் தேசிய மாணவப்படையில் சேர்ந்த போது அந்த எண்ணம் அப்படியே தலைகீழாகிப் போனது. இருள்பிரியாத அதிகாலை வேளையில் தெருநாய்களை எல்லாம் எழுப்பும் வண்ணம் க்ரீச்சிடும் பூட்ஸ்களோடு, கஞ்சிப் போட்ட விறைப்பு காக்கி உடுப்பில் பரேடுக்கு மிடுக்காக நடந்து போய்க்கொண்டிருந்தேன். (more…)
Author: பதாகை
எரிந்த கட்சி
மங்கையொரு பங்குடைய சங்கரன் நுதல் விழியால்
மன்மதன் எரிந்த கதை பொய்யா – மெய்யா
ஆர்மோனியத்தின் சுருதியை அனுபவித்தபடிக்கு இலாவணி பாடத்தொடங்கினார். முதலில் விநாயகர் வணக்கம். அப்புறம் குருவணக்கம். பிறகு சுற்றி வந்து சலாம் போட்டபடிக்கு சபை வணக்கம் செய்துவிட்டு, அடுத்த கட்டை சுருதிக்கு தாவுகிறார்.
“இப்படியாகத்தானே………..
ராகவிருந்தன், அனங்கன், காமதேவன் என்றெல்லாம் அறியப்பட்ட மாரவேள்…. தன்னிடம்… வந்து மன்றாடிய மலைமகளாம் இமையவன் புத்திரியின் வேண்டுகோளைக் கேட்டபடிக்கு…..
‘ஆலாலக் கண்டன், சுடுகாட்டு சித்தனிடம் சிந்தையை தொலைத்த பேதையே… நானாகப் போய் எப்படி அவனிடத்தில் காமத்தை கெளப்புவது…. ஆளு ரொம்ப கோவக்காரனாச்சுது… என் ஆயுளுக்கு வந்த அபாயமாச்சுது’ (more…)
கவியின்கண் – 5 “கையகத்தது அது பொய் ஆகாதே”
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணி யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே.
– ஔவை, புறநானூறு 101 (more…)
ருசி
– நரோபா –
அந்தப் பொட்டலம் என்னவோ அங்கேயேதான் கிடக்கிறது, சீந்துவாரில்லாமல்.
பட்டணத்து ரயில் நிலையங்கள் ஒரு பிரம்மாண்டமான உயிர்க் காடு. பலரும் தொலைந்துபோன, தொலைத்துக் கொண்ட காடு. எவரையும் கண்கொண்டு பார்க்க முடிவதில்லை, எப்போதும் எவரோ நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை அடித்துப் பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சம் நிலைகொண்டிருக்கும். பையை இறுகப் பற்றிக் கொண்டு ஊர் திரும்பக் காத்திருக்கிறேன்.
அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிக்குவான் என எதிர்பார்க்கவில்லை. நேற்றிரவுதான் கிருஷ்ணமூர்த்தி அவனைப் பார்த்ததாக போனில் சொன்னான். காலையில் கிளம்பிவிட்டேன். ஆவேசமும் கோபமும் உள்ளூர நுரைத்துப் பொங்கின. இரவெல்லாம் நினைப்புகள், கற்பனைகள். அவனை விதவிதமாகச் சிறுமை செய்வது போல், அவமதிப்பது போல், பெரியமனுஷத்தனத்துடன் மன்னிப்பது போல், அவனிடம் கெஞ்சி இறைஞ்சுவது போல், குத்திக் கிழிப்பது போல், பளாரென்று அறைவது போல். உறக்கமின்றி லயித்துக் கிடந்தேன். அவனைக் கண்டதும் என்ன செய்வது என்பதை இனிதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவனைச் சந்தித்தாக வேண்டும். நானிருக்கிறேன், உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றாவது அவனுக்கு உணர்த்தியாக வேண்டும். (more…)
திறந்த சாளரம்
ஹெக்டர் ஹ்யூக் மன்றோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் எழுத்தாளர். ‘சகி’ என்கிற புனைப்பெயரில் பல படைப்புகள் எழுதி ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு கூர்மையான சிறுகதைகள் எழுதியவர். இவர் கதைகளில் காணப்படும் திகில் நிறைந்த அங்கதம் தனித்துவமானது. வெளியாகி நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் The Open Window சிறுகதையின் சுவாரசியம் கடுகளவும் குறையவில்லை. 1986ல் ஷியாம் பெனகலின் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கதா சாகர்‘ தொடரில் இக் கதையும் இடம்பெற்றது.
oOoOoOoOoOoOoO
‘எனது அத்தை சிறிது நேரத்தில் கீழே வந்துவிடுவார் திரு. நட்டல்’, பதினைந்து வயதான, வெகு மிடுக்கான பெண் ஒருத்தி சொன்னாள், “அதுவரை நீங்கள் என்னோடுதான் பொழுதை கடத்த வேண்டும்”
ஃப்ராம்டன் நட்டல் வரப்போகும் அவளுடைய அத்தையை மறக்காமல், எதையாவது நல்லபடியாகச் சொல்லி, அந்த கணத்தின் மகத்தான மருமகளை மகிழ்வுறச் செய்ய தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தான். உண்மையில், இப்படியான அறிமுகமில்லாதவர்களை வரிசையாக சந்திப்பதால், அவன் அப்போது மெற்கொண்டிருக்கும் நரம்புமண்டல சிகிச்சைக்கு ஏதும் நலம் பயக்குமா என்று பலமாக சந்தேகித்தான். (more…)