Author: பதாகை

எமக்குத் தொழில் கவிதை

“எது நல்ல கவிதை என்று கேட்கிறார் கிரி
கோட்பாடு ஒன்றைச் சொல்கிறார் பாஸ்கர்
கோட்பாட்டை மீறியதுதான் கவிதை என்கிறார் ஸ்ரீதர்
நீ என்ன சொல்கிறாய்?”
என்று என் வீட்டு கிளியிடம் கேட்டேன்
 
‘மியாவ்’ 
 
“அதுவும் சரிதான். எங்கே நீ ஒரு கவிதை சொல்”
 
“மியாஆவ்வ்வ், 
மியாவ்வ்வ், 
மியாஆவ்” 

 ரைட்டு விடு.

கவியின்கண் – 6 “இரு பேராண்மை செய்த பூசல்”

– எஸ். சுரேஷ்-

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

ஔவையின் குறுந்தொகை பாடலின் எளிய ஆங்கில வடிவம் இது : (more…)

பூச்சி

– கமலாம்பாள்-

தூரத்து அண்டத்தின்
ஓர் துகள்;
இரவின் இருளில்
சிறு உயிர்;
சிறு கடி; சிறு வலி;

பு ச் சி

பார்வையின் விளிம்பின்
ஒரு ஓரம்;
உற்றுப் பார்த்தால் நகரும்;
வாய் மட்டும்தான்;

புபூ ச்ச் சிசீ

ஒன்றுதான்..ஆனால்
எங்கும் எதிலும்;
சிதறிய கண்கள்;
விழித்துக்கொள்கிறது
மூன்றாவது கண்.

அதிகாரத்தின் மானுட முகங்கள் – பூமணியின் ஏட்டையாவும் ஆத்தியப்பனும்

– அஜய். ஆர்-

தினசரி செய்திகள், சொந்தங்கள்/ தெரிந்தவர்களின் அனுபவங்கள் மூலம் காவல்துறை பற்றி தெரியவருவதில் அந்தத் துறை குறித்து எதிர்மறையான கருத்துக்களே அதிகம் மக்களிடம் உள்ளன. ஆனால் காவல்துறை அதிகாரிகள் பற்றி திரைப்படங்கள், பல சாகச குற்றப்புனைவுகள் பொதுவாக அளிக்கும் பிம்பம், அவர்கள் எப்போதும் நீதியின்பால் நிற்பவர்கள், அதற்காக எதையும்/ யாரையும் எதிர்ப்பவர்கள், சாகசங்கள் புரிபவர்கள் என்பதாகும். இந்த ஒற்றைத் தன்மையிலிருந்து மாறுபட்ட ஆக்கங்களை மான்கெல் (Mankell) போன்றோர் தங்கள் குற்றப்புனைவுகளில் தந்திருக்கிறார்கள். ‘Ardh Sathya’ போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன. பொது இலக்கியத்தில், குறிப்பாக இடதுசாரி ஆக்கங்களில் வழிபாட்டுத் தன்மையற்ற சித்தரிப்புக்களைக் காண்கிறோம். இவற்றில் வெளிப்படும் காவல்துறை அமைப்பின் கோர முகம் அச்சுறுத்துவதாக உள்ளது- காவல்துறையினர் அரசு எந்திரத்தால் மனிதத்தன்மை அகற்றப்பட்டு (dehumanized), அவர்களே எந்திரங்களாக உள்ளனர். (more…)

கவிதைகள் – க்யூ, கட்டியம் கூறுதல்

-ஸ்ரீதர் நாராயணன்-

வால் வைத்த q

சிறுமி தனக்குத் தெரிந்த சின்ன q-வை எனக்குணர்த்த
கையைப் பின்னாடி முறுக்கிக் காட்டும் அழகு
எந்த எழுத்துருவிலும் காணவில்லை

கட்டியம்கூறல்

கோதுமை மணி அலகை குவித்தபடிக்கு
இசைத்து செல்கிறது ராபின் பறவை
இனிவரும் வசந்தமெல்லாம் உபரி