எஸ். சுரேஷ்

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)

ரன்னிங் யோகா

running_man

ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஷூவுக்குள் மணல்
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஷூவுக்குள் மணல் இருப்பது எனக்கு பிடிக்காது
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
மணல் மணல் மணல் மணல்
நின்றால் ஷூ அவிழ்த்து உதறி விடலாம்
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
மணல் இம்சை செய்கிறது
ஓடு ஓடு ஓடு ஓடு 
மணல் மணல் மணல் மணல் மணல்
ஓடு ஓடு ஓடு ஓடு
மணல் மணல் மணல் மணல் மணல்
ஓடு ஓடு ஓடு ஓடு
ஒரு ஷூவில் மணல்
வலது கால் ஷூவினுள் மணல்
இடது கால் ஷூவில் இல்லை
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
மணல் மணல் மணல் மணல்
மனம் முழுக்க மணல்
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
கல் இடறி விழப்போகிறேன்
விழவில்லை
ஒரு கணம் மனதில் மணல் இல்லை
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
கட்டை விரல் வலிக்கிறது
மண் நெருடுகிறது
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
வலி வலி வலி வலி
மணல் மணல் மணல் மணல்
மணல் வலி மணல் வலி
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடிக்கொண்டிருந்தால் தாகம் எடுக்கும்
மணல் வலி தாகம் மணல் வலி தாகம்
மணல் வலி தாகம் மணல் வலி தாகம்
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
தாகம் தாகம் தாகம் தாகம் தாகம்
தண்ணீர் கிடைத்தால் தாகம் தீரும்
தண்ணீர் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் 
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
தண்ணீர் தண்ணீர் வியர்வை வியர்வை
வியர்வை வியர்வை வியர்வை வியர்வை
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
தண்ணீர் இருந்தால் குடிக்கலாம்
வியர்வை கழுவலாம்
தண்ணீர் தண்ணீர் வியர்வை வியர்வை
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
மூச்சிறைக்கிறது 
புஸ் புஸ் புஸ் புஸ்
வலி வலி புஸ் புஸ் புஸ் புஸ்
வலி வலி புஸ் புஸ் புஸ் புஸ்
தண்ணீர் தண்ணீர்
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
மனதில் மணல்
மனதில் தாகம்
மனதில் வலி
மனதில் களைப்பு
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
மனம் ஓடு 
ஓடு மனம்
ஓடு ஓடு ஓடு ஓடு 
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்

ஓரப்பார்வை

 எஸ். சுரேஷ் –

கண்ணை முக்கால்வாசி மூடிக்கொண்டு
பாதி உடல் தண்ணீரில் மூழ்கி இருக்க
வாய் அகல திறந்து படுத்திருக்கிறேன்

வாயினுள் இரு சிறிய பறவைகள் இரை தேடுகின்றன

என் கண்களிலிருந்து வழியும் கண்ணீரை
தேனீக்களும் பட்டாம்பூச்சிகள் உட்கொள்கின்றன

என் முதுகில் மூன்று நீர்பறவைகள்
உரிமையுடன் நிற்கின்றன

நதி சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது

அமைதியாய், அஹிம்சையின் வடிவாய்
நிச்சலனமாய் கிடக்கும் என்னை,
கரையில் நிற்கும் எருமை மட்டும்
ஏன் சந்தேகக்கண்ணுடன் பார்க்கிறது?

கவியின் கண்- 12 ‘பொழுதெல்லாம் எனக்கே’

 எஸ். சுரேஷ் –

 பொழுதெல்லாம் எனக்கே என்பது போலிருக்கும்போது
என்னை யாரும் உணவுண்ண அழைப்பதில்லை எனும்போது
மேகங்கள் கலைந்து வண்ணங்கள்
இழப்பதைப்  பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கூரையில் இலக்கின்றி பூனை
சுகமாகத் திரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது ஒவ்வொரு காலையும் எனக்காகக் காத்திருக்கும்போது
என்னை யாரும் அழைக்காத முடிவற்ற இரவில் இனி
எனக்காகக் காத்திருக்கும் உடலின் கண்கூசும் அழகில்
இளைப்பாற அவசரமாய் உடை களையும் அவசியம் இல்லை
துவக்கமற்ற இந்தக் காலை மௌனமாய்
என் விருப்பத்திற்கும்,
என் குரலின் அத்தனை ஓசைகளுக்கும்
என்னை விட்டுச் செல்கிறது.
இப்பொழுதே எனக்கோர் சிறை வேண்டும்

– Patrizia Cavalli  (more…)

கவியின்கண் – 11: “சிறிய ஒரு நட்சத்திரத்தின் கீழ்”

சிறிய ஒரு நட்சத்திரத்தின் கீழ்

தேவை என்றழைத்ததற்காக, தன்னிகழ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி அழைத்தது தவறென்றால், தேவையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சியே, தயவு செய்து  நான் உன்னை உரிமை கொண்டாடுவதற்கு கோபித்துக் கொள்ளாதே.
மரித்த என்னவர்களே, என் நினைவுகள் மெல்ல மறைவதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். (more…)