பீட்டர் பொங்கல்

கதைகள் ஏன் நமக்கு தேவையாய் இருக்கின்றன – உளப்பகுப்பாய்வின் படிப்பினைகள்

கார்டியன் தளத்தில் ஜான் ஹென்லி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

 

ஸ்டீபன் க்ரோஸ் எழுதுவதில் நிறைய இலக்கியத்தன்மை இருக்கிறது. ஈசாப் கதைகள், கிப்ளிங் கதைகளுக்குரிய வழக்கமான படிப்பினைகள் இவற்றுக்கு உள்ளதை புத்தகத்தின் அத்தியாய தலைப்புக்களைப் பார்த்தே நாம் சொல்லிவிட முடியும்: ‘நாம் எப்படி காதலுக்கான ஏக்கத்தால் காதலை அறியாதிருக்கிறோம்’, ‘நாம் எப்படி கோபத்தைக் கொண்டு சோகத்தைத் தவிர்க்கிறோம்’. தெளிவான, தேவையற்றவை கத்தரிக்கப்பட்ட இந்த ஃபேபிள்கள் பலவும் ஒரு நளினமான, கூர்மையான அவதானிப்புடன் முடிவுக்கு வருகின்றன – இவற்றை படிப்பினைகளாக மட்டுமே வாசிக்க முடியும்: ஒருவரால் மறக்கப்பட்ட ஒன்றாக இருப்பதைவிட ஒன்றை இழந்தவனாக இருப்பதே நல்லது; முற்றுப்புள்ளி வைப்பதென்பது துயரின் உயிர்ப்பை உணர்வற்றுப் போகச் செய்ய முடியும் என்ற பொய்யான நம்பிக்கையின் செயல். (more…)

இருளைப் பார்த்தல் – கோயாவின் ஓவியங்கள்

உடல்நலம் குன்றியபின், மனநிலை பாதிக்கப்படும்வரை கோயா பேனிஷ் அரசவையில் ஒரு சாதாரண ஓவியராகதான் இருந்தார். ஆனால், அவரது அல்டாமிரா குடும்ப உருச்சித்திரங்களில் கோயாவை பின்னர் சூழ்ந்த இருளின் நிழல்கள் சாயத் துவங்கிவிட்டனவா என்ற கேள்வியை எழுப்புகிறார் மார்கன் மீஸ், ஸ்மார்ட் செட் என்ற பத்திரிக்கையில்.

அக்கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம்:

1780களிலேயே தான் பின்னர் அளிக்கப்போகும் படைப்புகளைப் பற்றி கோயா கனவு காணத் துவங்கிவிட்டாரா? மிகவும் வழக்கமான முறையில் வரையப்பட்டிருக்கும் இந்த உருச்சித்திரங்களில் பிற்காலத்திய கோயாவின் சாயல்கள் உள்ளனவா? 18ஆம் நூற்றாண்டின் பிற்காலத்துக்குரிய ஸ்பெயினின் அரசவைச் சூழலில் வலம் வந்த இளம் கோயா, முன்னேறத் துடிக்கும் இந்த ஓவியர், அப்போதே வினோத காட்சிகளைக் காணத் துவங்கிவிட்டாரா? (more…)

ஆனந்த அகவல் – மரணத்தின்முன் மனித நேயம்

கார்டியன் தளத்தில் ஆண்ட்ரூ ப்ரௌன் எழுதிய இந்த நூல் மதிப்பீடு மரணத்தின் முன் வாழ்வின் பொருள் என்ன என்பதை விவாதிக்கிறது, மறதியின் முன் நினைவின் இடமும்தான் என்ன என்ற கேள்விக்கும் இட்டுச் செல்கிறது.

Landscapes of the Metropolis of Death என்ற இந்த நூல் துண்டுக் காட்சிகளாகத் தன் கதையைச் சொல்கிறது. இதன் மையமாக நான் கருதும் காட்சி இது: ஒரு சிறுவன் தன் ஹார்மோனிக்காவில் ஏதோ ஒரு ட்யூனை வாசித்தபடி அமர்ந்திருக்கிறான். இன்னொரு சிறுவன் அவனிடம் வந்து நீ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய் தெரியுமா என்று கேட்கிறான். இல்லை என்கிறான் அவன். ஆறு மாதங்களுக்கு முன் ஒரு முகாமில் எனக்கு இது கற்றுக் கொடுக்கப்பட்டது, அந்த முகாம் இப்போது இல்லை. (more…)

பிராங்க் ஓ’ஹாரா – ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு கவிதைகள்

 

 

அட்லாண்டிக் இதழில் மிகா மாட்டிக்ஸ் எழுதிய கட்டுரையை இங்கே முழுமையாக வாசிக்கலாம் –

சில கவிஞர்கள் நம் பேச்சுமொழியை உருவாக்குகின்றனர். வேறு சிலர், தன்னிகழ்வும் தரிசனமும் வாய்க்கப்பெற்று, மொழியில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே வெளிப்படுத்தும் மொழிவழக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பிராங்க் ஓ’ஹாரா இரண்டாம் பகுப்புக்கு உரியவர்: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரது லஞ்ச் கவிதைகள் பதிப்பிக்கப்பட்டபோது நாவலாசிரியர் கில்பர்ட் சொரண்டினோ இவ்வாறு எழுதினார்: இந்தக் கவிதைகள், “தீர்மானமாக ந்யூ யார்க்கின் joie de vivreஐக் கொண்டிருக்கின்றன: சற்றே நலிந்த, கசங்கிய, ஆனால் தற்போதுள்ள ‘பாணியை’ விட எப்போதும் ஒரு அடி உயரே உள்ள ஒருவகை மோஸ்தரில்”. (more…)

“இதை ஒரு-பொய்யும்-சொல்லாதிருத்தல் பாணி எழுத்து என்று அழைக்கலாம்” – டகேஷி ஹிராய்டா

வில் ஹேவார்ட்டின் இந்த பேட்டியின் முழு வடிவை பாம்ப் தளத்தில் வாசிக்கலாம்

வில் ஹேவார்ட்: ஆங்கில மொழிபெயர்ப்பில் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ள The Guest Catஐ என்னவென்று விவரிப்பீர்கள்? ஓரே சமயத்தில் அது டயரிக் குறிப்புகள் பலவும், கட்டுரை போலவும், ஏன் ஒரு கடிதம் போலவுமே இருக்கிறது.

டகேஷி ஹிராய்டா: அடிப்படையில் நான் ஒரு கவிஞன். கவிதை எழுதுபவன். ஆனால் விமரிசனங்களும் கட்டுரைகளும்கூட எழுதியிருக்கிறேன். நான் கவிதையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்கிறேன், அதன் பல்வேறு வடிவம் சார்ந்த சோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறேன். For the Fighting Spirit of the Walnut என்ற என் இரண்டாம் கவிதைத் தொகுப்புதான் ஆங்கில மொழிபெயர்ப்பில் முதலில் வெளிவந்திருக்கிறது. அது துண்டிக்கப்பட்ட வடிவில் எழுதப்பட்டது. ஆனால் The Guest Catல் அந்தப் பாணியை மாற்றிக் கொண்டேன். அதைவிட சரளமான உரைநடை பாணியில் எழுதினேன், இதுவும் முழுமையடையாத துண்டங்களாகதான் இருக்கிறது. சமகால இலக்கிய வடிவங்கள் குறித்து விமரிசனங்கள் எழுதிய காரணத்தால் நான் மேற்கொண்ட மாற்றங்கள் இவை. கவிதை அதன் வடிவம் குறித்த விமரிசனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், உரைநடையையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். (more…)