ஸ்ரீதர் நாராயணன்

திறந்த சாளரம்

Saki (H. H. Munro)

ஹெக்டர் ஹ்யூக் மன்றோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் எழுத்தாளர். ‘சகி’ என்கிற புனைப்பெயரில் பல படைப்புகள் எழுதி ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு கூர்மையான சிறுகதைகள் எழுதியவர். இவர் கதைகளில் காணப்படும் திகில் நிறைந்த அங்கதம் தனித்துவமானது. வெளியாகி நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் The Open Window சிறுகதையின் சுவாரசியம் கடுகளவும் குறையவில்லை. 1986ல் ஷியாம் பெனகலின் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கதா சாகர்‘ தொடரில் இக் கதையும் இடம்பெற்றது.

oOoOoOoOoOoOoO

னது அத்தை சிறிது நேரத்தில் கீழே வந்துவிடுவார் திரு. நட்டல்’, பதினைந்து வயதான, வெகு மிடுக்கான பெண் ஒருத்தி சொன்னாள், “அதுவரை நீங்கள் என்னோடுதான் பொழுதை கடத்த வேண்டும்”

ஃப்ராம்டன் நட்டல் வரப்போகும் அவளுடைய அத்தையை மறக்காமல், எதையாவது நல்லபடியாகச் சொல்லி, அந்த கணத்தின் மகத்தான மருமகளை மகிழ்வுறச் செய்ய தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தான். உண்மையில், இப்படியான அறிமுகமில்லாதவர்களை வரிசையாக சந்திப்பதால்,  அவன் அப்போது மெற்கொண்டிருக்கும் நரம்புமண்டல சிகிச்சைக்கு ஏதும் நலம் பயக்குமா என்று பலமாக சந்தேகித்தான். (more…)

வாசவதத்தை – 2

– ஸ்ரீதர் நாராயணன் –

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

“அதிகாரம் என்பது செலுத்துவதற்கு மட்டுமல்ல, ஏற்றுக் கொள்வதற்கும் உகந்ததாக இருக்க வேண்டும்” விஷ்ணுகுப்தர் அடிக்கடி சொல்வதுண்டு. பெரும் சுண்ணாம்புக்கற்களைக் அடுக்கி வைத்து, இடைவெளியில் சிறிய கற்களை உடைத்து நிரப்பி, எழுப்பப்பட்டு, இரண்டு அடுக்கு சுற்றுசுவர்களை கொண்ட ராஜகிருகக் கோட்டையைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு விஷ்ணுகுப்தரின் போதனைதான் நினைவுக்கு வருகிறது. ஹர்யாங்கர்களின் பேரரசனான ஷ்ரேனிகனின் காலத்திலிருந்தே ராஜகிருகம் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டது என்று சொல்கிறார்கள். கோசலம், காசி, பாஞ்சாலம், கலிங்கம், குரு வம்சத்தார், இக்ஷ்வாகுகள், மைதிலர்கள், சுரசேனர்கள், லிச்சாவியரிலிருந்து சிந்துநதி தீரத்து மாத்ரர்கள்வரை ராஜகிருகத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில் எவருக்கும் சுணக்கம் இருந்ததில்லை. (more…)

வாசவதத்தை – 1

– ஸ்ரீதர் நாராயணன் –

 

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

‘ஆசையை அறுத்தவர்களுக்கு அரசனாக இருந்தாலும் புல்லைப் போலத்தான். ஆனால் ஆசையின் இருப்புதான் அரசனின் விழுமியங்களில் முதலானது….’ விஷ்ணுகுப்தரின் குரல் அந்த நடுநிசியிலும் தலைக்குள் ஒலித்துக் கொண்டிருப்பது போல் இருந்க்கிறது அவனுக்கு. தலையை உதறி நினைப்பைத் தள்ளியபடிக்கு புரள்கிறான். (more…)

வண்ணத்துப்பூச்சி வரம்

– ஸ்ரீதர் நாராயணன் –

படபடவென சிறகடித்துப் போகும் பட்டாம்பூச்சிகளை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு அப்படியொரு களிப்பு. தம் கள்ளமில்லா தூய்மையால் அவை பூவுலகை நிறைத்துக் கொண்டிருப்பதாக பெருமை.

காற்றில் தவழ்ந்து வந்து கைமேலேறி அமர்ந்த வண்ணத்துப்பூச்சியை வாஞ்சையோடு தடவிக் கொடுக்கிறார்.

‘சிறு எறும்பு கூட தன் எதிர்ப்பை தெரிவிக்காது இறப்பதில்லை. எந்த ஜீவராசிக்கும் தற்காப்புக்கு போரிடும் நியாயம் உண்டு. பாவம் நீங்கள். இப்படி வலிமையற்ற வெகுளிகளாகவே தேங்கிவிட்டீர்கள். எங்கோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது’ (more…)

ஜானி சொன்ன பொய்

– ஸ்ரீதர் நாராயணன் –

johny_johny_yes_papa

‘ஜானி! ஜானி!’ – மூன்றரை வயது மழலையோடு குழந்தை பாடுகிறாள். அவன் திரும்பிப் பார்த்து புன்னகைக்கிறான். குழந்தை தொடர்ந்து பாடுகிறது.

‘யெஸ் பாப்பா’

‘ஈட்டிங் சுகர்?’

‘நோ பாப்பா!’

அடுத்து வரி தவறிப் போய் மீண்டும் ‘ஈட்டிங் சுகர்,…’ என்று சொல்லிவிட்டு அழுத்தமாய் ‘நோ பாப்பா’ என்று சொல்ல, அப்பா இடைமறிக்கிறான். (more…)