இந்த சிறப்பிதழுக்கான கவிதையாக பேயோனின் ‘இருத்தலியன்‘ இடம்பெற்றிருக்கிறது. பாறையை உருட்டிக் கொண்டு போகிறவனைப் போல பதாகைக் குழுவினரும் மற்றொரு சிறப்பிதழை தொகுத்து கொண்டு வந்துவிட்டார்கள். வாழ்த்துகள்.
பதாகையின் காலாண்டு சிறப்பிதழ் தொடரில் தற்போது சு. வேணுகோபாலின் படைப்புலகம் பற்றிய பெரும் தொகுப்பாக சுநீல் கிருஷ்ணனின் பொறுப்பில் உருவெடுத்திருக்கிறது. மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு பல நண்பர்களுடன் தொடர்ந்து உரையாடலில் இருந்துகொண்டு இந்த சிறப்பிதழை சுநீல் வெற்றிகரமாக வடிவமைத்திருக்கிறார். பல்வேறு ஊடகங்களில் பங்காற்றிக் கொண்டு வரும் அவருடைய பணிச்சுமையிடையே இதொன்றும் சாதாரண விஷயமில்லை.
இந்த சிறப்பிதழின் PDF தொகுப்பு
அடுத்த காலாண்டு சிறப்பிதழ் ரா. கிரிதரனின் பொறுப்பில் பாவண்ணன் சிறப்பிதழாக 29 நவ 2015 வரவிருக்கிறது.
பதாகையைத் தொடர்பு கொள்ள நண்பர்கள் கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Kindly set right the download link to enable offline reading of this interesting issue. The pdf link provided is erraneous.
இல்லீங்களே, இந்த லிங்க் சரியா இருக்கற மாதிரிதானே இருக்கு- https://padhakai.files.wordpress.com/2015/09/padhaakai-quarterly-21.pdf