ஸ்ரீதர் நாராயணன்

வித்தைக்காரனின் வெஞ்சினம்

Stephen Leacock
தமிழாக்கம்- ஸ்ரீதர் நாராயணன்

Stephen Leacock இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கில இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட நகைச்சுவையாளர். பரிகாசம் விரவிய விமர்சனங்களில் பொதுபுத்தி மடமையை சாடுவது அவரின் சிறப்பு. ஸ்டீஃபன் லீகாக் நினைவாக ‘நகைச்சுவையாளர் பதக்கம்‘ தொடர்ந்து 65 வருடங்களாக வழங்கப்படுகிறது. The Conjurer’s revenge நூற்றாண்டு பழமையான புனைவாக இருந்தாலும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வரும் கதையாக அமைந்திருக்கிறது.

conjurer-revenge

ப்பொழுது சீமாட்டிகளே, கனவான்களே” சொன்னான் வித்தைக்காரன் “இந்த துணியில் எதுவுமில்லை என்று உங்களிடம் காட்டியபடிக்கு, இதிலிருந்து தங்கமீன்கள் கொண்ட ஒரு நீர்க்கிண்ணத்தை எடுக்கப்போகிறேன். ப்ரெஸ்டோ!”

அந்தக் கூடம் முழுவது மக்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ‘ஆ! என்ன அற்புதம்! எப்படி இதை செய்கிறான்?’

ஆனால், முன் இருக்கையில் இருந்த துரித பேர்வழி, தன் அருகே இருப்பவர்களிடம் சத்தமாக கிசுகிசுத்தான் “அவன்-கைக்குள்-ஒளித்து-வைத்திருந்தான்” (more…)

பூனை சொல்லும் கவிதைகள்

Francesco Marciuliano
(தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

The author had an awesome blog with the excerpts from his book. Please check it out for buying the book.

ஏன் அலறுகிறாய்…

cat-poem-scream1

ஏன் அலறுகிறாய்?
நானென்ன தவறிழைத்தேன்?
ஏன் அழுகிறாய்?
அதை எப்படி நான் சரி செய்வது?
வேறு நிறத்தில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
வேறு அளவில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
வேறு அறையில் இருந்தால் உனக்குப் பிடிக்குமோ?
நான் என் அன்பைக் காட்டவே விரும்பினேன்
நன் என் நன்றியை வெளிப்படுத்தவே விரும்பினேன்
நான் உன் போர்வையில் ஒரு செத்த எலியை போடவே விரும்பினேன்
ஆனால் நீ இப்பொழுது அலறுகிறாய்
எனக்கு எப்படி உன்னை நிறுத்துவது என்று தெரியவில்லை

 

அவமானத்தை அழி

cat-poem-shame2

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அவர்கள் தெரிந்துகொள்ள என்னால் எப்போதும் விடமுடியாது

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
அவர்கள் பார்த்துவிட என்னால் எப்போதும் விடமுடியாது

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
நான் பூனையை விட பயங்கரமானவன்

அவமானத்தை அழி! அவமானத்தை அழி!
என்னுடைய இருண்ட, இருண்ட ரகசியத்தை ஆழ புதைக்கிறேன்
அவமானத்தை அழி! அவமானத்தை அழி!

அப்பாடி
நான் மூத்திரப்புரையை பயன்படுத்தியது இனி ஒருவருக்கும் தெரியாது

 

உன் மடியில் இருப்பது யார்?

cat-poem-lap2

இந்த வீட்டில் இன்னொரு பூனை இருக்கிறது
நான் பார்த்தேயிராத ஒரு பூனை
வெகு இளமையான ஒரு பூனை
அவள் பெயர் உனக்கு தெரியும் போல
தவறுதலாக என்னை அவள் பெயரிட்டு அழைத்தாய்
அந்த விளக்குக்கு முன்னால்
என் நண்பனான குட்டி திண்டுக்கும் முன்னால்
நான் ஒருபோதும் இவ்வளவு சிறுமைப்பட்டதில்லை
இனி நான் எப்போதும் நேசிக்காமல் போகலாம்.

கவிதைகள் – க்யூ, கட்டியம் கூறுதல்

-ஸ்ரீதர் நாராயணன்-

வால் வைத்த q

சிறுமி தனக்குத் தெரிந்த சின்ன q-வை எனக்குணர்த்த
கையைப் பின்னாடி முறுக்கிக் காட்டும் அழகு
எந்த எழுத்துருவிலும் காணவில்லை

கட்டியம்கூறல்

கோதுமை மணி அலகை குவித்தபடிக்கு
இசைத்து செல்கிறது ராபின் பறவை
இனிவரும் வசந்தமெல்லாம் உபரி

அதிகாரத்தின் ஆயுதங்கள் – வேல ராமமூர்த்தியின் சிறுகதையை முன்வைத்து

-ஸ்ரீதர் நாராயணன்-

நான் படித்த பள்ளியில் சீருடையாக காக்கி நிஜாரும் வெள்ளை சட்டையும்தான் இருந்தது. ஏனோ அந்த காக்கி கால்சட்டையை அணியவே பிடித்தம் இருக்காது. அக்கம்பக்கத்து பள்ளிகளில் அடர்நீலம், பழுப்பு வண்ணம் கொண்ட சீருடைகள் எல்லாம் பார்த்து ஏக்கமாக இருக்கும். ஏன்தான் இப்படி ஒரு நிறத்தை சீருடையாக தேர்ந்தெடுத்தார்களோ என்று பெரும் கோபம் கோபமாக வரும். ஆனால், ஒன்பதாம் வகுப்பில் தேசிய மாணவப்படையில் சேர்ந்த போது அந்த எண்ணம் அப்படியே தலைகீழாகிப் போனது. இருள்பிரியாத அதிகாலை வேளையில் தெருநாய்களை எல்லாம் எழுப்பும் வண்ணம் க்ரீச்சிடும் பூட்ஸ்களோடு, கஞ்சிப் போட்ட விறைப்பு காக்கி உடுப்பில் பரேடுக்கு மிடுக்காக நடந்து போய்க்கொண்டிருந்தேன். (more…)

எரிந்த கட்சி

-ஸ்ரீதர் நாராயணன்-

மங்கையொரு பங்குடைய சங்கரன் நுதல் விழியால்
மன்மதன் எரிந்த கதை பொய்யா – மெய்யா

ஆர்மோனியத்தின் சுருதியை அனுபவித்தபடிக்கு இலாவணி பாடத்தொடங்கினார். முதலில் விநாயகர் வணக்கம். அப்புறம் குருவணக்கம். பிறகு சுற்றி வந்து சலாம் போட்டபடிக்கு சபை வணக்கம் செய்துவிட்டு, அடுத்த கட்டை சுருதிக்கு தாவுகிறார்.

“இப்படியாகத்தானே………..

ராகவிருந்தன், அனங்கன், காமதேவன் என்றெல்லாம் அறியப்பட்ட மாரவேள்…. தன்னிடம்… வந்து மன்றாடிய மலைமகளாம் இமையவன் புத்திரியின் வேண்டுகோளைக் கேட்டபடிக்கு…..

‘ஆலாலக் கண்டன், சுடுகாட்டு சித்தனிடம் சிந்தையை தொலைத்த பேதையே… நானாகப் போய் எப்படி அவனிடத்தில் காமத்தை கெளப்புவது…. ஆளு ரொம்ப கோவக்காரனாச்சுது… என் ஆயுளுக்கு வந்த அபாயமாச்சுது’ (more…)