மன்ஹாட்டனில் உள்ள ஸ்ட்ராண்ட் என்ற புத்தகக் கடையில் டெபோரா ஐஸன்பெர்க்கும் ஜார்ஜ் ஸாண்டர்ஸும் வாசிப்பு மற்றும் உரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்றனர். இது குறித்து ஸ்டோரி ப்ரைஸ் என்ற தளத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த கட்டுரை இது. சமகால அமெரிக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமான இரு படைப்பாளிகள் பங்கேற்ற நிகழ்வை விவரிப்பதால் இக்கட்டுரை பதாகையில் பதிப்பிக்கப்படுகிறது. இதை எழுதியவர் பாட்ரிக் தாமஸ் ஹென்றி. (more…)
எழுத்து
“என்ன எழுதுகிறேன் என்பது எழுதி முடித்த பின்தான் தெரிகிறது” – டெபோரா ஐஸன்பெர்க் பேட்டி
பாரிஸ் ரிவ்யூ தளத்தில் டெபோரா ஐசன்பெர்க் அளித்த நேர்முகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பகுதி:
நான் எதையும் நினைத்துக் கொண்டு எழுதத் துவங்குவதில்லை.
கதை பண்ண முடியும் என்பதால்தான் தனக்கு கதை எழுதப் பிடித்திருக்கிறது என்று கோல்சன் வைட்ஹெட் ஒருமுறை சொல்லக் கேட்டேன். எனக்கு கதை பண்ணுவது அறவே பிடிக்கவில்லை என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.
அல்லது, எனக்கும் கதை பண்ண பிடித்திருக்கலாம், ஆனால் இல்லாத ஒன்றைக் கதை பண்ணுவதாக ஒரு உணர்வு வருகிறதே அந்த உணர்வை நான் வெறுக்கிறேன் என்பதுதான் உண்மையாக இருக்கலாம். நான் எழுதுவது நினைவின் நிலையை அடையும்வரை அது எவ்வகையிலும் முடிவடைந்த உணர்வு எனக்கு கிடைப்பதில்லை.
என்னிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு முழுமை இப்போது வெளிப்படுகிறது என்ற உணர்வு வர வேண்டும், அப்போதுதான் அது எனக்கு கதையாகிறது. எல்லாமே ஒரே சமயத்தில் வேலை செய்தால்தான் உண்டு. (more…)
கவிதைகள் வேண்டி…
எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை
அந்தப் பூனையைக் கூட
இன்று காணவில்லை
ஒன்றிரண்டு கரப்பான்பூச்சிகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றன
இவற்றை வைத்து கவிதை எழுத முடியும்?
துவைக்கும் இயந்திரம் கத்துகிறது
முறுக்கிப் பிழியப்பட்ட துணிகள்
ஒன்றை இழுத்தால் மொத்தமும் வருகிறது
சிக்கல்
வாழ்க்கை
நான்
மற்றவர்கள்
சில சமயங்களில் இப்படித்தான்
ஆகிறது
வாசிப்பும் விமரிசனமும்
– – கதிர்பாலா –
“புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்” என்ற பதிவில் சில விஷயங்கள் விடுபட்டுப் போயிருக்கின்றன என்று நினைக்கிறேன்.
“பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது,” என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். (more…)
ஆபோகி
– விக்கி –
கர்நாடக இசை கற்றுக் கொள்வதில் வர்ணம் ஒரு முக்கியமான கட்டம். கீதங்களில் ‘ஸ்ரீ கண நாதா’வுக்குப் பிறகு, ஸ்வர ஜதியில் ‘ராரா வேணுகோபாலா’வுக்குப் பிறகு, வர்ணத்தில் நுழைவது பயிற்சிப் பிராயத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்ட மைல்கல்.
“எத்தன வர்ணம் போட்டுருக்கு?” என்பது இசை தெரிந்த பாட்டி, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமா மாமிகள் தவறாமல் கேட்கும் கேள்வி. நீங்கள் கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னும் இந்தக் கேள்வியைத் தப்ப முடியாது.
ஐஐடியில் படிக்கும் மாணவனிடம், “உன் ப்ளஸ் டூ மார்க் என்ன?” என்று கேட்டு தெரிந்து கொள்வது போன்ற விஷயம் இது. வர்ணங்கள் அத்தனை முக்கியம். வித்வான்கள்கூட துவக்கத்தில் ஒரு வர்ணம் பாடிவிட்டுதான் கச்சேரியைத் துவக்குகிறார்கள். ஏனென்றால் மேளம் கட்ட இதுதான் உசிதம். (more…)