சிறுகதை

பேயோனுடன் ஒரு சந்திப்பு

பஷீர் பாய்

நான் அவர் அறைக்குள் நுழைந்தபோது அவர் கணினியில் கதையோ கட்டுரையோ கவிதையோ எழுதிக்கொண்டிருந்தார். நான் பக்கத்தில் சென்று ‘ஹலோ’ என்றதும் திடுக்கிட்டு பார்த்தார்.

“ஒ, நீங்களா? கறிகாய் வாங்கப் போன என் மாமியார்தான் திரும்பி வந்துவிட்டாங்களோன்னு பயந்துட்டேன். அப்படி ஓரமா உக்காருங்க. அவங்க வரதுக்குள்ள இதை முடிக்கணும்”

“எதை சார்? கதையா, கவிதையா, கட்டுரையா?”

“ஓஹோ. என் படைப்புல இந்த மூணுத்துக்கும் உனக்கு வித்தியாசம் தெரியுதா? அப்படின்னா நான் இன்னும் உழைக்கணும்,” என்று சொல்லிவிட்டு கீபோர்ட்டை ஆக்ரோஷமாக தாக்க ஆரம்பித்தார் பேயோன். அரைமணி கழித்துதான் நிறுத்தினார். (more…)

திரும்பி வந்தவன்

எஸ். சுரேஷ்

காலை ஆறு மணி. வழக்கம் போல் வாக்கிங் கிளம்பினேன். எங்கள் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் உள்ள கட்டிடங்களை ஒரு மணிநேரம் பல முறை சுற்றி வருவது வழக்கம். நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் எதிரில் வெங்கடேஸ்வர் ராவ் தோன்றினார். “ஹலோ சார்?” என்று விசாரித்தார். எனக்கு அவரை பார்த்ததில் ஒரே ஆச்சரியமாக இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் கழித்து அவரை மறுபடியும் பார்க்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வெங்கடேஸ்வர் ராவ் தன் மனைவி ராஜி என்று அழைக்கப்படும் ராஜேஸ்வரியையும் பன்னிரண்டு வயது பெண் குழந்தையும் (அவள் பெயர் மாலினியோ ஷாலினியோ) விட்டுவிட்டு வேறொரு பெண்மணியின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணை இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும், ராவ் ராஜியை கூடிய சீக்கிரமே விவாகரத்து செய்துவிடுவார் என்றும் அரசல்புரசலாகக் கேள்விப்பட்டேன். (more…)

பிறிதொரு ஆடவன் – டிசைரி யூங்

 

என் தங்கை வீட்டுக்காரன் சட்டையில்லாமல் வீட்டைச் சுற்றித் திரிவதை விரும்புகிறான். மார்ஷியாவைத் திருமணம் செய்து கொண்ட நாள் முதலே அவனுக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது.

நான் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போய் நிற்பதில்லை. என் மகனைப் போலவே என் மருமகனும் ஒரு குழந்தைதான், அவனுக்கு எட்டு மாதங்கள்தான் ஆகின்றன, போன மாதம்தான் தவழ ஆரம்பித்தான்.

“தொழில் எப்படி போகிறது, சில்வியோ?” என்று என்னைக் கேட்கிறான். அவன் மஞ்சள் நிற கிண்ணம் ஒன்றில் ஓட்ஸ், வாழைப்பழம், தயிர் கலந்து கொண்டிருக்கிறான். குழந்தையின் கிண்ணம் போலிருக்கிறது.

“நன்றாகப் போகிறது. ஆனால் என் அப்பாவுடன் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம்தான். அவர் மிக அதிகம் எதிர்பார்க்கிறார், அவருக்கு எதையும் கனகச்சிதமாகச் செய்தாக வேண்டும். சில சமயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போய்விடலாம் பொலிருக்கிறது,” என்று ஒப்புக்கொள்கிறேன். (more…)

அமைதி பள்ளத்தாக்கு பயணம்

எஸ். சுரேஷ்

sv3

“பிரும்மாண்டமான கருநாகம் ஒன்று சொன்ன நேரத்திற்கு அந்த கற்கள் பின்னாலிருந்து வெளியே வரும். இங்கு அதற்காக அவர்கள் வைத்திருக்கும் பாலைக் குடித்துவிட்டு மறுபடியும் அந்த கற்களுக்கு பின்னால் சென்று மறையும்”.

இதைக் கேட்டதும் நாங்கள் இரண்டடி பின்னகர்ந்தோம். பாம்பு ஒன்றும் அங்கு கண்ணில் படவில்லை.

எங்களுக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தவரின் பெயர்தான் ‘பேபி’, அவரோ அறுபது வயது தாண்டியவர். மலையாளமும் தமிழும் கலந்து பேசினார். கறுத்த நிறம். முறுக்கிய தசைகள். உழைப்பாளியின் உடல்கட்டு. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடோடிகள் நடத்தும் ஒரு விழாவை விவரித்துக் கொண்டிருந்தார்.

“அப்படி வராவிட்டால்?” என்று ஹரிணி கேட்டாள். அவளுக்கு எப்பொழுதும் எல்லாவற்றிலும் சந்தேகம் இருக்கும்.

“வரும். நிச்சயம் வரும்,” என்றார் பேபி தீர்மானமாக.

ஹரிணி மெளனமாக இருந்தாள். அவளுக்கு அந்த பதிலில் அவ்வளவு திருப்தி இல்லை என்பது தெரிந்தது. (more…)

நாற்காலி

நரோபா

naroba

ஜானுவிடம் ஃபோனில் பேசிக்கொண்டே அஞ்சுவிளக்கு வரை வந்துவிட்டதை அப்போதுதான் கவனித்தான் செந்தில். “ஒகே மா. வீட்டுக்கு போய் மெசேஜ் பண்றேன்..டேக் கேர்..” என்று சொல்லிவிட்டு அணைத்தான். ஒன்பதரை ஆகிவிட்டது. கடையை சாத்திவிட்டு கிளம்ப வேண்டும். சுந்தரமண்ணே காத்து கொண்டிருப்பார்.

சுந்தரம் வாசலில் தயாராக நின்றிருந்தார்.

“தம்பி கணக்கு எல்லாம் சரி பார்த்து வெச்சுட்டேன்..எட்டு ரூவா கல்லாவுல கெடக்கு..நீங்க ஒருக்கா பாத்துருங்க.”.

“சரியண்ணே..பாக்குறேன்..நீங்க கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு கல்லாவில் கணக்கை சரி பார்க்க துவங்கினான். அவன் கல்லா நாற்காலியில் அமரும்போதெல்லாம் பற்கூசும் கிரீச்சிடல் எழும். நாற்காலியை மாற்றவேண்டும் என வழக்கம் போல் எண்ணிக் கொண்டான். சுந்தரம் வாயிலில் நின்றபடியே இந்தப் புதுப்பழக்கத்தை சுணங்கிய முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். ரூபாய் கற்றைகளை எண்ணி வரவு செலவு கணக்குகளை சரி பார்த்தபின்னர்தான் தலைதூக்கி அவர் நின்றிருந்ததை கவனித்தான்.

“கிளம்பலியா..?”

ஏதோ முனங்கியது போலிருந்தது “இல்ல.. எல்லாம் சரியா இருக்கா?”

செந்தில் வழக்கம் போல் புன்னகைத்தான்.

“சரி வரேன் தம்பி” என்று முணுமுணுத்தபடி சைக்கிளை தள்ளிக்கொண்டு இருளில் மறைந்தார். (more…)