விமர்சனம்

இதுதான் மனிதன் எனின் – பிரிமோ லேவி

Peter Trachtenberg on The Periodic Table and If This Is a Man : Remembering Auschwitz: –

If This is a Man, என்ற தலைப்பையே பயன்படுத்த விரும்புகிறேன். இது ஒரு trauma, பேரதிர்ச்சியின் கதை. கிரேக்க மொழியில் ட்ராமா என்ற சொல்லுக்கு காயம் என்று பொருளுண்டு. வழக்கமாக நாம் பேரதிர்ச்சி குறிப்பிட்ட ஒரு நிகழ்வு என்று நினைக்கிறோம் – “அனைத்துக்கும் அப்பாற்பட்ட நிகழ்வு, புரிந்துகொள்வதற்கில்லாத, நடப்பின் தூய, நேரடித் தாக்கமாகிய நிகழ்வு,” என்று அதை அழைக்கிறார் இலக்கிய விமரிசகர் ஷோஷன்னா ஃபெல்மென். (more…)

பிரெடரிக் செய்டல்

சென்ற மாதம் பிரடரிக் செய்டலுக்கு பாரிஸ் ரிவ்யூவின் ஹதாதா விருது வழங்கி, ஜான் ஜெரமையா சலிவன் ஆற்றிய உரை இது:
 
ஆஃப்சைட்டில் இருக்கும், ஆள் இல்லாதபோது வேலையை முடித்துக் கொடுக்கும் ஒரு வகை பாரிஸ் ரிவ்யூ ஊழியன் என்ற முறையில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கூறும் மகிழ்ச்சி எனக்கு உண்டு என்று என் உரிமையை நிலைநாட்டிக்கொண்டு,  இந்த விருதை அறிவிக்கும் வாய்ப்பளித்து என்னை கௌரவித்த ரிவ்யூவைச் சேர்ந்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கௌரவம் என்ற சொல்லை இதைவிடக் குறைந்த  விளையாட்டுத்தனத்துடன் வேறெங்கும் நான் பயன்படுத்தியதில்லை என்று நினைக்கிறேன்.

(more…)

மோபி-டிக்

கார்டியன் பத்திரிகையில் ராபர்ட் மக்க்ரம் நூறு சிறந்த நாவல்கள் என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். 1851ஆம் ஆண்டு ஹெர்மன் மெல்வில் எழுதிய மோபி-டிக் என்ற நாவல் குறித்த அவரது கட்டுரையின் தமிழாக்கம் இது:
 
எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கொண்ட ஒரு குழு ஆகஸ்டு ஐந்தாம் தேதி, 1850ஆம் ஆண்டு, மஸாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள மான்யூமெண்ட் மவுண்டன் மீதேறியது. இங்கிலாந்தில் உள்ள லேக் பகுதியில் நடைபயணம் செய்வது போன்ற அமெரிக்க சங்கதி இது. இந்த உல்லாசச் சுற்றுலாவில் பங்கேற்ற இலக்கியவாதிகளில், ஸ்கார்லட் லெட்டர் என்ற நாவலை எழுதிய (நம் நூறு சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று) நாற்பத்தாறு வயது ஸ்கார்லட் ஹாதோர்ன்னும் ஒருவர். அது அப்போதுதான் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்திருந்தது. இளம் நாவலாசிரியரான ஹெர்மன் மெல்வில் இன்னொருவர். இவர் டைப்பீ என்ற மிகப்பெரும் வெற்றி பெற்ற முதல் நாவலை எழுதியபின், சவுத் சீயில் திமிங்கல வேட்டையாடும் ஒருவன் மனமுதிர்ச்சி அடைவதைப் பற்றிய சிக்கலான நாவல் ஒன்றை எழுதப் போராடிக் கொண்டிருந்தார்.

(more…)

கவியின் கண்- 12 ‘பொழுதெல்லாம் எனக்கே’

 எஸ். சுரேஷ் –

 பொழுதெல்லாம் எனக்கே என்பது போலிருக்கும்போது
என்னை யாரும் உணவுண்ண அழைப்பதில்லை எனும்போது
மேகங்கள் கலைந்து வண்ணங்கள்
இழப்பதைப்  பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கூரையில் இலக்கின்றி பூனை
சுகமாகத் திரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது ஒவ்வொரு காலையும் எனக்காகக் காத்திருக்கும்போது
என்னை யாரும் அழைக்காத முடிவற்ற இரவில் இனி
எனக்காகக் காத்திருக்கும் உடலின் கண்கூசும் அழகில்
இளைப்பாற அவசரமாய் உடை களையும் அவசியம் இல்லை
துவக்கமற்ற இந்தக் காலை மௌனமாய்
என் விருப்பத்திற்கும்,
என் குரலின் அத்தனை ஓசைகளுக்கும்
என்னை விட்டுச் செல்கிறது.
இப்பொழுதே எனக்கோர் சிறை வேண்டும்

– Patrizia Cavalli  (more…)

மிக முக்கியமான கேள்வி – ஜேன் ஸ்மைலி

டெகாமரான் கதைகளில் மூன்றாம் நாளன்று ஃபியாமெட்டா ஒரு கதை சொல்கிறாள். ஹிதோபதேசத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து பொகாஷியோ கையாண்ட கதை அது. இதில் தான் விரும்பும் மணமான ஒரு பெண்ணை பொது குளியலறையில் சந்திக்க திருட்டுத்தனமாகத் திட்டமிடுகிறான் ஒருவன். அங்கே, இருட்டில் அவளது கணவனாக நடித்து அவளைக் கற்பழிக்கிறான். தான் ஏமாந்துவிட்டதை அறிந்தபின் அந்தப் பெண்ணுக்கு தான் நேசிக்கும் தன் கணவனை ஏமாற்றுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது – இதிலுள்ள வெட்கமும் சீரழிவும் அவளுக்கே உரியது, அவளைக் கற்பழித்தவனுக்கல்ல. இன்றும் கார்டியனோ அல்லது வேறு பல செய்தித்தாள்களைப் படித்தாலும் 650 ஆண்டுகளுக்குப்பின், ஹிதோபதேசம் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், 900 ஆண்டுகளுக்குப்பின், நம்மால் இந்தக் கதையைக் காண முடிகிறது. ஏமாற்றப்பட்ட பெண், கடெல்லா, கற்பழித்தவன் அறிந்த உண்மையை உணர்ந்திருக்கிறாள்: இன்று நாம் வாசிக்கும் இளம் பெண்களைப் போலவே, ஏமாற்றப்பட்ட குற்றத்துக்காக அவள் தண்டிக்கப்படுவாள் அல்லது கொல்லப்படுவாள். அவளது நோக்கங்கள் ஒரு பொருட்டல்ல. ஆனாலும் என்ன? Plus ça change, plus c’est la même chose, என்று நாம் சொல்லலாம். ஆனால், அந்த மிக முக்கியமான கேள்வியின் காரணத்தால், நாம் அதைச் செய்வதில்லை. (more…)