விமர்சனம்

ஆயிரம் ஏக்கராக்கள்

– அஜய் ஆர். – 

ஒரு முதியவர் தன் சொத்துக்களை தன் மூன்று பெண்களுக்கிடையே பிரித்துத் தர முடிவு செய்ய, மூத்த இரு பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள, கடைசி மகள் அவ்வாறு செய்வதில்லை. அந்தப் பெண்ணை அவர் விலக்கி வைக்கிறார். ஷேக்ஸ்பியரை முழுமையான/ சுருக்க (abridged/original) பதிப்பில் படித்திருந்தவர்கள் இந்தச் சூழலை ‘King Lear’ கதையோடு இணைக்கலாம். ஆம், தன் நாட்டை இரு நன்றிகெட்ட பெண்களுக்கு கொடுத்து துன்பப்பட்ட லியரின் கதையை , ஸ்மைலி லியரின் இரு மூத்த பெண்களின் கோணத்தில் ‘A Thousand Acres’ நாவலில் எழுதியுள்ளார்.

லியராக இதில் லாரி குக். அவர் அரசரல்ல, அதற்கு மாறாக ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உரியவர். அவருக்கு மூன்று பெண்கள். மூத்தவள் ஜின்னியும் அடுத்த பெண் ரோசும் திருமணமாகி தங்கள் கணவர்களுடன் அப்பாவுக்கு ஒத்தாசையாக பண்ணையில் வசிக்கிறார்கள்,. கடைசி பெண் கரோலின் ஒரு வக்கீல். அப்பாவைவிட்டுப் பிரிந்து வேறொரு ஊரில் இருக்கிறாள். குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்கும் ஒரு நாளில் தன் நிலபுலன்களைப் பெண்களுக்குப் பங்கு பிரிப்பதாக லாரி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். ஜின்னியும் ரோசும் இதற்குச் சம்மதிக்கின்றனர். ஆனால் கரோலின் அதற்கு எதிராகக் குரலெழுப்புகிறாள். இதனால் லாரி தன் சொத்தில் கரோலினுக்கு உரிமையில்லை என்று அறிவிக்கிறார். இதையடுத்து தொடரும் நிகழ்வுகள் அனைவரின் வாழ்வையும் துயர் தோய்ந்ததாக மாற்றுகின்றன. நெருங்கிய உறவுகள் கடும் அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு , குடும்பத்தினர் அனைவருமே வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுகின்றனர். (more…)

கவியின்கண் – 11: “சிறிய ஒரு நட்சத்திரத்தின் கீழ்”

சிறிய ஒரு நட்சத்திரத்தின் கீழ்

தேவை என்றழைத்ததற்காக, தன்னிகழ்விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி அழைத்தது தவறென்றால், தேவையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மகிழ்ச்சியே, தயவு செய்து  நான் உன்னை உரிமை கொண்டாடுவதற்கு கோபித்துக் கொள்ளாதே.
மரித்த என்னவர்களே, என் நினைவுகள் மெல்ல மறைவதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். (more…)

பறவைப்பாடல்

டானா டார்ட்டின் மூன்றாவது நாவலின் துவக்கத்தில் அவரது நாயகன் தியோ டெக்கரின் வயது பதின்மூன்று. அவன் மிகவும் நேசிக்கும் அவனது தாய்,- அவன் மீது மிகுந்த நேசம் வைத்திருப்பவள், கலையில் ஆர்வம் கொண்டவள் – தனக்கு மிகவும் பிடித்த ஓவியம், பதினேழாம் நூற்றாண்டு டச்சு கலையின் சிறிய ஒரு அதிசய ஓவியம், அதைக் காண அவனை அழைத்துச் செல்கிறாள். கரேல் ஃபாப்ரிஷியஸின் அந்த ஓவியம் இந்தப் புத்தகத்தின் தலைப்புமாகிறது, “கோல்ட்ஃபிஞ்ச்”. துவக்க காட்சியில் அது ந்யூ யார்க்கில் உள்ள மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆப் ஆர்ட்ஸில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

தியோவும் அவனது தாயும் மிகவும் நெருக்கமான இருவர்; நம்பிக்கை வைக்கமுடியாத அவனது அப்பா அவர்கள் வாழ்வை விட்டு ஏறத்தாழ முழுமையாகவே இல்லாமல் போய் விட்டார். அவர்கள் அங்கிருக்கும்போது ஒரு வெடி விபத்து நேர்கிறது. 1654ஆம் ஆண்டு 32ஆம் வயதில் டெல்ஃப்ட் நகரில் ஃபாப்ரிஷியஸ் இறப்பதற்கு காரணமாக இருந்த வெடிமருந்து விபத்தின் எதிரொலியாக இது இருக்கிறது. தியோவுக்கு நினைவு தப்புகிறது. அவனது தாயும் வேறு பலரும் இந்த விபத்தில் மரணமடைகின்றனர். தியோ எதுவும் புரியாத மயக்க நிலையில் விழிக்கிறான், ஒரு சிறிய ஓவியத்தை ஏந்தியபடி மியூசியத்தைவிட்டுத் தப்பியோடுகிறான். மியூசியத்தின் சுவற்றிலிருந்து கீழே விழுந்த ஓவியம் அது. இறந்து கொண்டிருப்பவன் ஒருவனுக்குரிய ஒரு கனமான தங்க மோதிரமும் அவனுக்கு அதனுடன் கிடைக்கிறது. மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அந்த மனிதன் தியோவிடம் சொல்கிறான்: “ஹோபார்ட் அண்ட் ப்ளாக்வெல். ரிங் த கிரீன் பெல்” (more…)

நெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்

                                                                                                                            – நரோபா –

“ஏன் நீங்கள் உங்களைப் பற்றி எந்த வரலாற்றையும் வருங்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வதில்லை ? “என்று கேட்டேன். அதற்கு அவர், “ நாங்கள் சகஜ முறையை ( எளிய வாழ்க்கையை ) கடைபிடிக்கிறோம் என்பதால் எங்களுக்குப் பின் எந்த சுவடுகளையும் விட்டுச்செல்வதில்லை” என்று சொன்னார். அலைகள் மெல்ல ஓய்ந்து, ஆற்றுப்படுகையில் சிறிய அளவில் நீர் இருந்தது. சேற்றில் சில ஓடங்களை ஒடக்காரர்கள் இழுத்துச் சென்றனர். சேற்றில் ஓடம் தன் தடத்தை விட்டுச் சென்றது. அவர் தொடர்ந்து பேசினார், “ஆற்றின் வெள்ளப் பெருக்கில் மிதக்கும் ஓடம் என்றேனும் தடத்தை விட்டுச் செல்கிறதா? சேற்றில் உழலும் ஒடக்காரர்கள் அவர்களுடைய சிறுமையின் வெளிப்பாடாக நீண்ட தடத்தை மண்ணில் விட்டுச் செல்கின்றனர். இது சகஜ வழியல்ல.”
க்ஷிதி மோகன் சென், இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம், வங்காளத்து பால்கள்.

2012 ஆம் ஆண்டு கவிஞர் தேவதேவனை கவுரவிக்கும் விதமாக கோவையில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த மலையாள கவிஞர் கல்பட்டா நாராயணன் அவர்களுடன் கவிதை குறித்து நண்பர்கள் அளவளாவுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அப்போது நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மலையாள கவிஞர் கல்பற்றாவின் கவிதைகளை நண்பர்கள் வாசித்து விவாதித்தனர். அந்த informal கூடுகையில் பங்குகொண்ட நண்பர்களுக்கு அது ஒரு மறக்க முடியாத அனுபவம். எனக்கும்கூட. கவிதை குறித்தான புதிய திறப்புகள் சாத்தியமாகின. கல்பட்டாவை எனக்கே எனக்கான கவி என என் அகம் கண்டு கொண்ட தருணம் அது. (more…)

கரும்புனல் குறித்த சிறிய குறிப்பு

பாஸ்கர் லக்ஷ்மன்

இந்தப் புனைவைப் படிக்கத் தொடங்கியவுடன் 1980 களில் மேற்கொண்ட பீகார் மற்றும் உத்திரப்பிரதேச பயணம் தான் நினைவில் வந்தது. துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டு சாதாரணமாக திரிந்து கொண்டிருந்த குண்டர்களை பாட்னா இரயில் நிலையத்தில் காண நேர்ந்ததை இன்று நினைத்தாலும் மனம் பதறுகிறது. ஆனால் அதெல்லாம் சகஜம் போல அங்கிருந்தவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. வாரணாசி கடைத்தெருவில் ஒரு குண்டா ஐந்தாறு பேர்களுடன் வருவதைப் பார்த்து எல்லாக் கடைகளும் மூடப்பட்டன, அவர்கள் கடந்து சென்றவுடன் மீண்டும் திறந்தார்கள். அப்போது தான் தமிழ்நாட்டில் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறோம் என உணர முடிந்தது.

தன் பீகார் அனுபவத்தை மையமாகக் கொண்டு நாவலாசிரியர் ராம்சுரேஷ் தன் புனைவை கனகச்சிதமாக எழுதியுள்ளார். மிக எளிமையான, சரளமான நடை. சிக்கலில்லாத, திட்டமிட்டு அமைக்கப்பட்ட கதைக்களம். இந்தியாவில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜாதியம் மூன்றும் தான் அரசாங்கம், அதிகாரவர்க்கம் மற்றும் மக்கள் எனும் முக்கோணப் புள்ளிகளை இணைக்கும் கண்ணிகளாக இருக்கின்றன. அதிலும் பீகாரில் கேட்கவே வேண்டாம். இதனுடைய ஓர் அனுபவப் புனைவு தான் கரும்புனல் எனலாம். (more…)