– Stephen Leacock –
தமிழாக்கம்- ஸ்ரீதர் நாராயணன்
Stephen Leacock இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கில இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட நகைச்சுவையாளர். பரிகாசம் விரவிய விமர்சனங்களில் பொதுபுத்தி மடமையை சாடுவது அவரின் சிறப்பு. ஸ்டீஃபன் லீகாக் நினைவாக ‘நகைச்சுவையாளர் பதக்கம்‘ தொடர்ந்து 65 வருடங்களாக வழங்கப்படுகிறது. The Conjurer’s revenge நூற்றாண்டு பழமையான புனைவாக இருந்தாலும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வரும் கதையாக அமைந்திருக்கிறது.
“இப்பொழுது சீமாட்டிகளே, கனவான்களே” சொன்னான் வித்தைக்காரன் “இந்த துணியில் எதுவுமில்லை என்று உங்களிடம் காட்டியபடிக்கு, இதிலிருந்து தங்கமீன்கள் கொண்ட ஒரு நீர்க்கிண்ணத்தை எடுக்கப்போகிறேன். ப்ரெஸ்டோ!”
அந்தக் கூடம் முழுவது மக்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ‘ஆ! என்ன அற்புதம்! எப்படி இதை செய்கிறான்?’
ஆனால், முன் இருக்கையில் இருந்த துரித பேர்வழி, தன் அருகே இருப்பவர்களிடம் சத்தமாக கிசுகிசுத்தான் “அவன்-கைக்குள்-ஒளித்து-வைத்திருந்தான்” (more…)