நான் பஸ் ஏறியவுடன் அவள் பார்த்த அரை நொடிப் பார்வை
இதயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது
வட்டமான வெள்ளை முகம், கரிய அடர்த்தியான கூந்தல்,
சிவப்பு நிற சுடிதார் மற்றும் கழுத்தில் கருகமணி மாலை
காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பஸ் ஏறியிருப்பாளோ?
அல்லது அவள் அம்மாவோ மாமியாரோ
அந்த வேலையைச் செய்திருப்பார்களோ?
ஆபிஸ் வேலை சரியாகச் செய்வாளா?
அல்லது வீட்டைப் பற்றிய கவலையில்
வேலையை கோட்டை விடுவாளா?
மாதவிலக்கு சமயத்தில் கணவன் மேல் எரிந்து விழுவாளா?
மாமியாருடன் அடிக்கடி சண்டை போடுவாளா?
மனதை வருடிய ஒரு பார்வை
எண்ணற்ற கேள்விகள்