சமுராயின் அலை

ஹரி வெங்கட்

 

போரில் தோற்ற சடலங்கள்
கடலில் தூக்கியெறியப்பட்டன.
சலனமற்ற நீர் எதையும் கழுவுவதில்லை.
கடலடியில் ஆவிகள் இன்னமும் அமைதியின்றி அலைகின்றன.
கடலலைகளின் இடைவெளியில் கேட்க முடிகிறது
அந்த ஆவிகளின் குரலை –
‘எங்களை நதியில் எறியுங்கள்
ஓடும் நதி மட்டுமே கழுவியபடி இருக்கும்
எங்கள் வாளின் ரத்தத்தையும்
எங்களை விலகா அவமானத்தையும்’.

 

நன்றி – kiku.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.