ஒரு சோதனை முயற்சியாக, மூல மொழியைக் கருதாமல், திரு ஏ கே ராமானுஜன் அவர்களின் Speaking of Shiva என்ற தொகுப்பில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன – கலவை விளைவுகளுடன்!

கால்களாய்
ஓடும் ஆறு.
வாய்களாய்
தகனிக்கும் நெருப்பு.
கைகளாய்
வருடும் தென்றல்.
அடியார்க்கு
குறியீடுளாய் விரிகிறது
முழைஞ்சுறை பெருமானின்
அவயவம்.
(அல்லம பிரபு)
.
.
௦௦௦
.
ஒருவேளை நீ
மூங்கிலை இரண்டாய்
பிளந்தால்;
அடிப்பகுதியை பெண்ணாகவும்,
தலைப்பகுதியை ஆணாகவும் கொள்;
அவை பற்றிக்கொள்ளும் வரை
ஒட்டித் தேய்;
இப்போது சொல்,
அதில் பிறந்த நெருப்பு,
ஆணா,
அல்லது பெண்ணா,
.
(தேவர தாசிமய்யா)
.
– : ஸ்ரீதர் நாராயணன்
.
௦௦௦
.
மரத்தின் மேல் குரங்கைப் போல்
கிளைக்குக் கிளை தாவும்
இந்தத் தகிக்கும் மனதை
நான் எப்படி நம்புவேன்?
என் அப்பனிடம் போக
விட மறுக்கிறதே
கூடலசங்கமதேவா
.
(பசவண்ணர்)
.
.
௦௦௦
.
மாயை என் மாமியார்;
உலகம் என் மாமனார்;
புலிக்குட்டி போல் மூன்று மைத்துனர்கள்;
என் புருஷனின் மனமெல்லாம்
பெண்களின் சிரிப்பு.
தூ, இவனல்ல இறைவன்.
உலகம் என் மாமனார்;
புலிக்குட்டி போல் மூன்று மைத்துனர்கள்;
என் புருஷனின் மனமெல்லாம்
பெண்களின் சிரிப்பு.
தூ, இவனல்ல இறைவன்.
ஆனால் குறுக்கே நிற்கிறாள் என் நாத்தி.
இந்தச் சிறுக்கிக்குத் தெரியாமல் நழுவி
என் கணவனை ஏய்த்து
அரனைக் கள்ளக் காதலனாய்க் கொள்வேன்
என் கணவனை ஏய்த்து
அரனைக் கள்ளக் காதலனாய்க் கொள்வேன்
மனமே என் சேடிப் பெண்:
அவள் அருளால் அடைவேன்
இறைவனை,
அழகுக்கு அழகான என் இறைவன்
முகடுகளுக்கு உரியவன்
மல்லிகை போல் வெண்ணிறன்
அவனை வரித்தேன்
நாயகனாய்
அவள் அருளால் அடைவேன்
இறைவனை,
அழகுக்கு அழகான என் இறைவன்
முகடுகளுக்கு உரியவன்
மல்லிகை போல் வெண்ணிறன்
அவனை வரித்தேன்
நாயகனாய்
–
(அக்கா மகாதேவி)
.
image credit – Exotic India