செய்தி ஒன்றை கொடுப்பதற்காக வருவது போல்
நம் பால்கனி நோக்கி விரைந்து வரும் பறவைகள்
அதைத் தாண்டிப் பறக்கும், எப்போதும் தாண்டிப் பறந்து
நம் கண்முன்னே தம் திறமையை வெளிக்காட்டும்,
நாம் உவமானங்களைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என்று
நமக்குச் செய்தி சொல்வது போல.
அவற்றின் உயர்தலும் பறத்தலும்
தரையில் வாழும் நம்மை பொறாமை படச் செய்தாலும் –
இப்போது பெருந்திரளாய், உறுதியான இறக்கைகளில் உயரேயிருக்கிறோம் –
இப்படி உறைந்த பறவைப் பார்வை,
இப்படி இறகுமுனைகளிடையே பயந்ததோர் இருப்பு
அல்ல அவை நமக்குச் சொன்னது.
அடில் ஜுஸ்ஸாவாலாவின் Highrises என்ற கவிதை மொழிபெயர்ப்பு
ஒளிப்பட உதவி- Mikuratv, Pixabay