“எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்” என்று குட்டி கங்காரு கேட்க, தாய் கங்காரு அதை மடியில் வைத்துக் கொண்டு ஒரு எம்பு எம்பி வானத்தில் இருந்த மேகத்தைப் பிய்த்து தன் குட்டியிடம் கொடுத்தது
வெண்மேகத் துண்டத்தை கோன் ஐஸ் போல் சப்பிச் சாப்பிட்ட குட்டி, “இந்த வெள்ளை ஐஸவிட கருப்பு ஐஸ்தான் இன்னும் டேஸ்டா இருக்கும்,” என்றது
“அதுக்கு இப்போ சீசன் இல்ல. குடுத்தத சாப்பிடு” என்ற தாயைப் பார்த்து, “இதுவும் நல்லாதான் இருக்கு” என்று சொன்னது குட்டி கங்காரு.
ஒளிப்பட உதவி- Taylor James