வரவேற்பறையில்
அழகான பார்பி பொம்மை ஒன்று
ஆபாச கோணத்தில் கிடக்கிறது
கால்களை பரப்பியபடி
சமையலறையில்
பால்
காய்ச்சிக் கொண்டிருக்கிறார்
அம்மா
பூஜையறையில்
தியானத்தில் இருக்கிறார்
பாட்டி
சோபாவின் பின்புறம்
தொலைந்த ஏதோ ஒன்றை
தேடிக் கொண்டிருக்கிறது
குழந்தை
தொலைக்காட்சியில்
நேற்றைய வன்கொடுமைச் செய்தி
கசிந்துகொண்டிருக்கிறது
ஓசையின்றி
அங்கே
ஜன்னல் வழி
மெல்லிய காற்றும்
நுழைந்து செல்கிறது
சலனமின்றி..