நான் உட்புகுந்த அறை இந்த அறையின் கனவு.
சோபாவின் அத்தனை காலடித்தடங்களும் நிச்சயம் எனதாயிருக்க வேண்டும்.
நாயின் முட்டை வடிவ ஓவியம்
இளம் பருவத்தில் என்னைச் சித்தரிக்கிறது.
ஏதோவொன்று மிளிர்கிறது, ஏதோவொன்று மௌனிக்கப்படுகிறது.
தினமும் மதியம் நாம் மகரோனி சாப்பிட்டோம்,
ஞாயிறு தவிர, அன்று நமக்குப் பரிமாறப்படுவதற்கான தூண்டுதல்
ஒரு சிறு காடைக்கு அளிக்கப்பட்டது. உன்னிடம் ஏன் இவற்றைச் சொல்கிறேன்?
நீதான் இங்கில்லவே இல்லையே.