மெதுவாக அசைந்தாடிக்கொண்டு
கீழே விழும் இலை
தண்ணீரிலிருந்து மேலெழும்
இலையுடன் கூடுகிறது
விண்ணை நோக்கிச் செல்லும் கல்
சற்று இளைப்பாறிக் கீழிறங்கி
தண்ணீரில் மூழ்குகிறது
மனதின் நீர்க்குமிழி சற்று
மேலெழுந்து உடைகிறது
மெதுவாக அசைந்தாடிக்கொண்டு
கீழே விழும் இலை
தண்ணீரிலிருந்து மேலெழும்
இலையுடன் கூடுகிறது
விண்ணை நோக்கிச் செல்லும் கல்
சற்று இளைப்பாறிக் கீழிறங்கி
தண்ணீரில் மூழ்குகிறது
மனதின் நீர்க்குமிழி சற்று
மேலெழுந்து உடைகிறது