வருணன்
தசைகளின் இறுக்கம் தளர்த்தி
தலைமயிர் பறித்து தாடைதனில்
பதியனிட்டு விளையாடுகிறாள்,
காலக் குழந்தை.
வளைகாப்பால் பூரித்த
நாளைய தாயைப் போல
தொந்தி சரியவிட்டு
நடையின் வேகம் திருடி
பரிகசித்து வம்பிற்கு இழுக்கிறாள்-
நீயதனை தள்ளாமையென்கிறாய்!
என் உயிர்ச் சோற்றின் சில பருக்கைகள்
கவர்ந்து எங்கோ ஒரு கருவறையிருட்டில்
மிதக்கும் சிசுவின்
ஆன்ம பொம்மை செய்கிறாள்,
காலக் குழந்தை.
எது கொடுக்கப்பட்டதோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
அருமை. தங்களது தமிழ் வார்த்தைகள் எனக்கு புதியது. உயிர்ச்சோற்றின் சில பருக்கை அற்புதமான கையாளல். வாழ்த்துக்கள்
நட்பின் மகிழ்விக்க
தே.கஜேந்திரன்.