இரா. கவியரசு
நன்றாகத் தூங்குகிறது
நெருப்பு
பற்றிப்பரவி கொன்று விழுங்கும்
அதன் அசுர நாக்குகள்
மழைச்சுவையில்
மக்க ஆரம்பித்திருக்கின்றன
மலைஉச்சியை உடைக்கும்
அதன் பொங்குதல்
நெஞ்சுக்குள்
குளிர்ப்பதனப் பெட்டியில்
மூடி வைக்கப்பட்டிருக்கிறது
கூடிய மட்டும்
தீப்பொறிச் சிறகுகளை
விரிக்க விடாமல்
தண்ணீர்ச்சுவர்கள்
சூழ்ந்தணைக்கின்றன
பற்றும் ஒவ்வொன்றையும்
தன்னைப் போல எரிய வைக்கும்
உயிரின் DNA
மாற்றி அமைக்கப்படுகிறது
அடைக்கப்பட்ட
பாதுகாக்கப்பட்ட
முழுவதும் போர்த்தப்பட்ட
குடுவைக்குள்
சுடர் விட்டெரிய பயந்து
கண்கள் மட்டும்
சிமிட்டிக் கொண்டிருக்கிறது.
//சுடர் விட்டெறிய பயந்து/ சுடர் விட்டெ”ரி”ய என வந்திருக்கணுமோ? அர்த்தமே மாறி விட்டது.
🙂
நன்றி, திருத்துகிறேன்.
டிஎன் ஏ மாறினதுக்குப் பின்னர் என்ன சொல்வது? 😦