சிபி சரவணன்
சவுரி வித்தவளின் கரங்களுக்குள்
வீணையாகியது வில்லுப்பாட்டு
நாடோடித் திரிந்த இருளச்சியின் குரலுக்கு தோதாகிறது ராகம்
ஞானத்தின் அம்பு பாலத்தில்
தகிடதத்தம் போடுகிறது புராணம்
மேட்டுக்குடி சம்சாரிகளுக்கும்
குறச்சியின் கீதத்தில் மோகம்
மெட்டுக்கு மெட்டாய்
உள்ளங்கை தொடையில் புரள
ஓயாமல் ஊதி ஊதி
வெடித்து சிதறுகிறது
ஓர் ஊதாரி மழைவண்டு