எஸ். சுரேஷ்
நான்கு கன்னட கவிகள் – ராண்டோ
ஒரு சோதனை முயற்சியாக, மூல மொழியைக் கருதாமல், திரு ஏ கே ராமானுஜன் அவர்களின் Speaking of Shiva என்ற தொகுப்பில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன – கலவை விளைவுகளுடன்!

அடியார்க்கு
காத்திருக்கும் கவிதை

எதுகையும் மோனையும் கச்சிதமாய் அமர
தங்குதடையின்றி வார்த்தைகள் பிரள
அகத்தின் ஆழத்தை வாக்கியங்கள் தொட
மனிதனுக்கு புதுவழி காட்ட
ஒரு கவிதை என்னுள் தோன்றியது
மனதில் இருந்த கவிதை மறைவதற்கு முன்
கணினியில் பதித்துவிட விரைந்தேன்
என் லெனோவோ திங்க்பாட் மேல் தூங்கிக்கொண்டிருந்த
பூனை எழுந்து என்னைப் பார்த்து முறைத்தது
பூனைக்கு பால் எடுக்க நான் சமையலறை சென்றேன்
image credit – Literary Cats
காமாகுரா
![]()
இன்றைக்கும் ஜப்பான் என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது காமாகுராதான். நரூசே சானின் அன்பும், அமைதியான புத்தரும், கூடவே அந்த தலைவலியும்.
அன்று திடீரென்று, “இந்த சனிக்கிழமை நான் உங்களை காமாகுரா அழைத்து செல்கிறேன். நீங்கள் வருவீர்களா?” என்று நரூசே சான் கேட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
தன்பாத், சிந்த்ரி, ராஜ்கன்க்பூர், ஜகதீஷ்ர், நாக்தா என்று யாரும் பார்க்காத ஊர்களாக சுற்றிக் கொண்டிருந்த எனக்கு அதுதான் முதல் வெளிநாட்டு பயணம். இரண்டு நாட்களுக்கு முன் நரீதாவில் இறங்கி, வேக ரயில் பிடித்து டோக்கியோ வந்து சேர்ந்திருந்தேன். அடுத்த நாள் விடுமுறை நாள். முதல் முறையாக ‘வெண்டிங் மெஷின்’ பார்த்து, அதில் பணம் போட்டு ஒரு குளிர்பானம் கையில் எடுத்து, தெருவில் நடக்கும் எல்லோருக்கும் ஜப்பானிய விதிப்படி தலை குனிந்து வணக்கம் சொல்லிக்கொண்டே நடந்தேன். அன்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த எல்லோரையும் வணங்கியிருப்பேன். இந்தியாவிலிருந்து வந்தவனுக்கு ஜப்பான் சம்பிரதாயம் தெரியாது என்று யாரும் நினைக்கக் கூடாதல்லவா? வெளிநாட்டிற்குச் செல்லும்பொழுது எப்படியெல்லாம் நம் நாட்டின் பெயரை காப்பாற்ற வேண்டியிருக்கிறது! (more…)
கற்பூர வாசனை

என்ன கவிதை எழுதலாம் என்று
மேஜை முன் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது
‘படார்’ என்ற ஓசையுடன் வாசற்கதவு திறக்க
கழுதை ஒன்று உள்ளே நுழைந்து,
“நீதான் கவிஞனா?” என்று என்னைப் பார்த்து கேட்டது
திகைத்திருந்த நான் தலையாட்டினேன்
“உன் புத்தகம் சுவையாய் இல்லை. சுத்த வேஸ்ட்” என்றது
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றேன்,
கவிஞனின் ஆணவத்துடன்.
“தெரிந்து என்ன ஆகப்போகிறது?
சாமி கும்பிடப் போகிறோமா என்ன?”
என்று கூறி பின்னங்கால்களால் மேஜையை உதைத்துச் சென்றது.
போகிறபோக்கில்,
“அடுத்த புத்தகமாவது ருசியாக இருக்கட்டும்”,
என்று சொன்னதைக் கேட்டு என் மனைவியும் மகளும்
இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
image credit: Directors Notes