எழுத்து

குறுஞ்செய்திகள்- இருமொழிக் கவிதை – காஸ்மிக் தூசி

– காஸ்மிக் தூசி-

1-smartphone-wallpaper

சந்திக்கும்
இடம், நேரம்
பற்றிய கேள்வி
இறுதிக் கணத்தின்
இயலாமையின் பதில்

தேர்வு அறைமுன் நிற்பது
அனுமதிச்சீட்டுடன்
அரங்கத்தில் நுழைவது

இரவு ரயிலை தவறவிட்டது
எதிர்பாராமல் முத்தமிட்டது (more…)

ஈனி மீனி மைனி

ஸ்ரீதர் நாராயணன்

eenie_minie

சட்டென நீட்டிய இடக்கையை
புறம்தட்டிவிட்டு
வலக்கையை இழுத்து
ஒருகவளம் சோற்றை வைக்கிறாள்,
அம்மா.

அடுத்த கவளத்திற்கு,

ஈனி மீனி மைனி மோ
கேட்ச் த மங்கி பை த டங்கி
என்று மிழற்றியபடி
இடக்கையில் வந்து நிறுத்திவிட்டு,

அம்மாவிற்கு என்றொரு அரைக்கண
புன்னகையை தந்துவிட்டு
சட்டென வலக்கையை நீட்டுகிறது.

என்றோ இடுப்பு எலும்பு நோக
உந்தித்தள்ளிய உயிர்விதையை
வாரியணைத்து மீண்டும்
வயிற்றில் இட்டுக்கொள்கிறாள்.

எந்த கணக்கு போட்டுத்தான்
என்னிடம் வந்தாயோடி

புத்தக திருவிழா – மணல்வீடு ஹரிகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம்

மாதம் இருமுறை சிற்றிலக்கிய பத்திரிகையான ‘மணல்வீடு’, தமிழின் கூத்துக்கலைகளை பற்றிய கவனத்தையும் விழிப்புணர்வையும் உண்டாக்க தொடர்ச்சியான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இவ்வருட புத்தக கண்காட்சிக்கு தங்களுடைய ‘மணல்வீடு இலக்கிய வட்டம்’ சார்பாக கொண்டு பா. ராஜாவின் மாயப்பட்சி (கவிதை தொகுப்பு), மயூரா ரத்தினசாமியின் மூன்றாவது துளுக்கு (சிறுகதை தொகுப்பு) மற்றும் தவசியின் அழிபசி (கவிதை தொகுப்பு) என்று மூன்று புத்தகங்களை கொண்டு வருகிறார்கள். புத்தக வெள்யீடுகளுடன், தொல்கலைகளின் ஆதாரவடிவம் மாறாமல் உயிர்ப்போடு வைத்திருக்கும் கூத்து கலைஞர்களுக்கான அங்கீகாரமும், விருது வழங்குதலும் முக்கிய நிகழ்வாக இருந்தது. புதிய புத்தகங்களைப் பற்றியும், தங்களுடைய அடுத்த செயல்திட்டங்களைப் பற்றியும் திறந்தமனதுடன் பதாகையுடன் நிகழ்த்திய உரையாடல்.

manalveedu1 manalveedu2 manalveedu3

பதாகை: மணல்வீடு வெளியீடாக கவிதைப் பிரதிகளும், சிறுகதை தொகுப்பும் ‘மணல்வீடு’ கொண்டு வருவது மகிழ்ச்சியானதொரு விஷயம். இந்த நூல் தேர்வுகளைப் பற்றி, மணல்வீட்டின் பதிப்பக கொள்கைகளைப் பற்றி கூறுங்களேன்.

மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: படைப்பு அதன் இடத்தை அடையும் . உரியதை தேடிக் கண்டும் மணல்வீடு வெளியிடும். கலை இலக்கிய சார்ந்த ( பிரதி- நிகழ்கலை இரண்டுக்கும்) சமதையான மதிப்பீடுகள், உரையாடல்கள் உருவாக்குதல் சமரசமற்று தகுதியான அப்படைப்புகளை நூலாக்கம் செய்வதும் பின் அதன் செயல்களாம்.. (more…)

அருண் கொலாட்கரின் பட்டர்ஃப்ளை தமிழாக்கம்

நம்பி கிருஷ்ணன்

கதையேதுமில்லை அதற்குப் பின்னே.
நொடியைப் போல் அது பிளவுபட்டிருக்கிறது.
தன்னைச் சுற்றியே அது சுழன்று திரும்புகிறது.

வருங்காலம் அதற்கில்லை.
எந்த கடந்த காலத்தின் மீதும் குத்தி வைக்கப்படவுமில்லை.
நிகழ்காலத்தின் சிலேடையது.

மஞ்சள் நிறத்த குட்டிப் பட்டாம்பூச்சி அது.
கேடுகெட்ட இக்குன்றுகளுக்கெல்லாம்
தஞ்சமளிக்கிறது தன் இறகிற்கடியே.

ஒரு துளி மஞ்சள்தான்,
மூடுவதற்குள் விரிக்கிறது
விரிப்பதற்குள் மூ..

எங்கே அது?

கயிறு

சிகந்தர்வாசி 

“இப்போதான் எழுந்து பல் தேச்சி வெளியில டீ குடிக்க வந்திருக்கோம்”

“……”

“நேத்தி ராத்திரி ஒரு தரிசனம் ஆச்சு. குளிச்சப்புறம் மறுபடியும் ஒரு தரிசனத்துக்கு போவோம்”

“……”

“எல்லாம் பத்திரமா வருவேன். கவலைப்படாத”

“…..”

“ஆமாம். முதல்லையே சொன்னேனே. மத்தியானம் பஸ். ராத்திரி வந்துடுவேன்”

“அம்மாவா?” என்று கேட்டான் பஜ்ஜி.

“ஆமாம்”

நாங்கள் இருவரும் ஸ்ரீசைலம் வந்திருந்தோம். இளங்காலை நேரம் ஒரு கடையில் டீ சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தோம். (more…)