விமர்சனம்

கவியின் கண் 14 – நீல நெருப்பு கண்கள்…

 எஸ். சுரேஷ் –

முதலில் நம்மை உருவாக்கிய இந்த பேராசையிடமிருந்து
நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்
அதுதான் என்னை இந்த பாரின்
ஒரு மூலையில் உட்கார்ந்து,
பாதிரியின் பேரவாவுடன் காத்திருக்க வைத்திருக்கிறது,
குறிப்பிட்ட அந்த தருணத்திற்காக-
எதிரில் நீல நெருப்பு கொண்ட கண்கள்,
அபாயத்திற்கு பழக்கப்பட்ட அந்த கண்கள்,
முன்கணிக்கப்பட்ட பாதையில்,
என் கன்னங்களின் வெட்கச் சிரிப்பை கோரும்,
அவை கோரிய நாணமும் அவற்றுக்கு கிட்டும்.

– பாட்ரிசியா கவல்லி (more…)

டோல்கீனின் பேவொஃல்ப்: மான்ஸ்டர்களை வீழ்த்துதல்

 
 
டோல்கீன் தன் ‘பேவோல்ஃப்’ மொழிபெயர்ப்பைத் தனியாய் எடுத்து வைத்திருக்கலாம், ஆனால் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப்பின் அவர் இது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். அந்தக் கவிதை குறித்த மிகச் சிறந்த கட்டுரை என்று மட்டுமல்ல, பலர், இது ஆங்கில இலக்கியத்தின் மிக அருமையான கட்டுரைகளில் ஒன்று என்றும் கருதுகின்றனர். இதுதான் அந்தக் கட்டுரை “பேவொல்ஃப்: மான்ஸ்டர்களும் விமரிசகர்களும்”. விமரிசகர்களுக்கு மான்ஸ்டர்கள் மேல் என்று நினைத்தார் டோல்கீன். கவிதையின் பொருள் புறக்கணிக்கப்பட்டு, தொல்பொருள் மற்றும் மொழியியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பது அவரது கருத்தாக இருந்தது. பேவொல்ஃப்பில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, எந்த அளவுக்கு கற்பனை உள்ளது? அண்மையில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுக்கு அதனுடன் உள்ள உறவு என்ன?

(more…)

புதிய உலகம் படைக்க அறிவியல் புனைவுகள் உதவுமா?

The Ascender என்ற தளத்தில் டாமியன் வால்டர் எழுதியுள்ள Rebuilding the World என்ற கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகள்:

இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இங்கிலாந்தில் உள்ள கல்லூரி நகரான ஆக்ஸ்ஃபோர்டில், கற்பனையை மீட்டெடுக்கும் கதைகளைப் படைக்கும் நோக்கத்தில் சில எழுத்தாளர்கள் The Inklings என்ற குழுவாய் கூடினார்கள். அவர்களில் சி.எஸ். லூயிஸ் ஒருவர், அவரது நார்னியா நாவல்கள் ஒரு தலைமுறை குழந்தைகளை வசீகரிப்பதாக இருக்கும். ஜே.ஆர்.ஆர். டோல்கின் மற்றொருவர், இவரது மிடில் எர்த் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கதையாக இருக்கும், இதைச் சிலர் ஏற்க மறுக்கலாம். தொழில் புரட்சி உலகில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தைத் தன் குழந்தைப் பருவத்தில் கண்ணுற்றவர் டோல்கின். ,மனித வரலாற்றில் முதன்முறையாக உலகெங்கும் வெடித்த பெரும் யுத்தத்தின் கொடூரங்களைத் தன் இளம் பருவத்தில் எதிர்கொண்டு உயிர்பிழைத்தவர் அவர். இந்த இரட்டை அனுபவங்களைக் கொண்டு அவர் நவீன உலகுக்கான புதிய தொன்மம் என்று தான் கருதிய ஒரு கதையை உருவாக்குவார். (more…)

கதைகள் ஏன் நமக்கு தேவையாய் இருக்கின்றன – உளப்பகுப்பாய்வின் படிப்பினைகள்

கார்டியன் தளத்தில் ஜான் ஹென்லி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

 

ஸ்டீபன் க்ரோஸ் எழுதுவதில் நிறைய இலக்கியத்தன்மை இருக்கிறது. ஈசாப் கதைகள், கிப்ளிங் கதைகளுக்குரிய வழக்கமான படிப்பினைகள் இவற்றுக்கு உள்ளதை புத்தகத்தின் அத்தியாய தலைப்புக்களைப் பார்த்தே நாம் சொல்லிவிட முடியும்: ‘நாம் எப்படி காதலுக்கான ஏக்கத்தால் காதலை அறியாதிருக்கிறோம்’, ‘நாம் எப்படி கோபத்தைக் கொண்டு சோகத்தைத் தவிர்க்கிறோம்’. தெளிவான, தேவையற்றவை கத்தரிக்கப்பட்ட இந்த ஃபேபிள்கள் பலவும் ஒரு நளினமான, கூர்மையான அவதானிப்புடன் முடிவுக்கு வருகின்றன – இவற்றை படிப்பினைகளாக மட்டுமே வாசிக்க முடியும்: ஒருவரால் மறக்கப்பட்ட ஒன்றாக இருப்பதைவிட ஒன்றை இழந்தவனாக இருப்பதே நல்லது; முற்றுப்புள்ளி வைப்பதென்பது துயரின் உயிர்ப்பை உணர்வற்றுப் போகச் செய்ய முடியும் என்ற பொய்யான நம்பிக்கையின் செயல். (more…)

ஆனந்த அகவல் – மரணத்தின்முன் மனித நேயம்

கார்டியன் தளத்தில் ஆண்ட்ரூ ப்ரௌன் எழுதிய இந்த நூல் மதிப்பீடு மரணத்தின் முன் வாழ்வின் பொருள் என்ன என்பதை விவாதிக்கிறது, மறதியின் முன் நினைவின் இடமும்தான் என்ன என்ற கேள்விக்கும் இட்டுச் செல்கிறது.

Landscapes of the Metropolis of Death என்ற இந்த நூல் துண்டுக் காட்சிகளாகத் தன் கதையைச் சொல்கிறது. இதன் மையமாக நான் கருதும் காட்சி இது: ஒரு சிறுவன் தன் ஹார்மோனிக்காவில் ஏதோ ஒரு ட்யூனை வாசித்தபடி அமர்ந்திருக்கிறான். இன்னொரு சிறுவன் அவனிடம் வந்து நீ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய் தெரியுமா என்று கேட்கிறான். இல்லை என்கிறான் அவன். ஆறு மாதங்களுக்கு முன் ஒரு முகாமில் எனக்கு இது கற்றுக் கொடுக்கப்பட்டது, அந்த முகாம் இப்போது இல்லை. (more…)