எஸ். சுரேஷ்

தவளை இளவரசன்

எஸ். சுரேஷ்

தாமரை இலை மேல் அமைதியாய்
உட்கார்ந்துக் கொண்டிருந்த தவளை
அந்த வழியாக குதிரை மேல் செல்லும்
இளவரசியைப் பார்த்து கத்தியது
இளவரசி அருகில் வந்து தவளைக்கு முத்தமிட
ஓர் இளவரசனாய் மாறியது தவளை
அவனைக் கண்டு திடுக்கிட்ட இளவரசி
“ஐயோ, இவ்வளவு அசிங்கமான இளவரசனை
நான் பார்த்ததில்லை” என்று கூறிவிட்டு
குதிரை மேல் ஏறி அங்கிருந்து பறந்தாள்
இளவரசன் கண்ணில் நீர் மல்க
அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்
இதை மரத்தின் மேலிருந்து பார்த்த பாம்பு கூறியது
“நுணலும் தன் வாயால் கெடும்”

கவியின் கண்- மகத்தான காதல்

 எஸ். சுரேஷ்

அவளுக்கு வயது அறுபது. தன் வாழ்வின்
மகத்தான காதலை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

தன் நேசத்துக்குரியவன் கைகோர்த்துச் செல்கிறாள்.
காற்றில் ஆடுகிறது அவளது கேசம்.
அவளை நேசிப்பவன் சொல்கிறான்::
“உன் முடி முத்து போல் இருக்கின்றது:”.

:முட்டாள் கிழம்”
என்கின்றனர் அவள் பிள்ளைகள்.

– அன்னா ஸ்விர்ஸ்டின்ஸ்கஹா  

இதே தொடரில், முதியோரின் பிரச்சினைகள் பற்றி எழுதியபோது, இது குறித்து இன்னும் பேச வேண்டியிருக்கிறது என்றார் நண்பர் ஸ்ரீதர்.

முதுமையை வேறொரு கோணத்தில் இப்போது பார்க்கலாம் – இந்தக் கவிதை அதற்கொரு நல்ல அறிமுகம்.

முதுமை, அல்லது மத்திய பருவத்தின் பின்காலம் (இதற்கொரு சொல் உண்டா என்ன?), உன்னை தனிமை தொடரும் பருவம். நகர்ப்புறச் சூழலில்தான் இதைச் சொல்கிறேன், கிராமங்களின் கதை வேறு. (more…)

பாரின் ரிட்டர்ன் – ராண்டோ

(பிரபல மொழிபெயர்ப்பாளர் திரு கல்யாணராமன் அவர்களின் அவதானிப்பைத் தொடர்ந்து 26.11.2014 அன்று, சங்கப் பாடல் மற்றும் ஏ கே ராமானுஜன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை இணைத்து இப்பதிவு திருத்தப்பட்டது)

ஏ கே ராமானுஜம் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள், இடைவெளிகளுக்கு முக்கியத்துவம் தருபவை, அவற்றின் உணர்வுச் செறிவில் மௌனத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், மூல மொழியில் உள்ளதையும் மொழிபெயர்ப்பில் உள்ளதையும் ஒப்பிட்டு நோக்கும்போது, சில விடுபடல்கள் கேள்விக்குறியனவாகத் தெரிகின்றன, தமிழறியாத ஒருவர் ஆங்கிலச் சொற்களை மட்டுமே கொண்டு அடையக்கூடிய பொருள், தமிழில் உள்ளதற்கு இணையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சோதனை முயற்சியாக, ஏ கே ராமானுஜனின் ஆங்கிலக் கவிதைகளை நெருக்கமாக ஒட்டி, அவர் மொழிபெயர்த்த சில சங்கப் பாடல்களின் தமிழாக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. சரி தவறுகளுக்கு அப்பால், ஏ கே ராமானுஜனின் மொழிபெயர்ப்பை மீண்டும் வாசிக்கச் செய்ததெனில், இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.

கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

Look, friend,
fear of scandal will, only thin out passion.
And if I should just give up my love
to end this dirty talk,
I will be left only with my shame.

My virgin self of which he partook
is now like a branch half broken
by an elephant,
bent, not yet fallen to the ground,
still attached to the mother tree 
by the fiber of its bark.

கேள், தோழி,
பழிச்சொல் பயம், காமத்தை குறைக்கத்தான் செய்கிறது.
என் காதலை விட்டுக் கொடுத்தாலாவது
இந்த இழிபேச்சை நிறுத்தலாம் என்றால்,
எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.

அவன் கொண்ட என் பெண்மை
பெரும் களிற்றால்,
பாதி முறிந்த கிளைபோல
வளைந்து, ஆனால் மண்ணில் விழாது,
அதன் பட்டையின் நாரால்
இன்னமும் தாய்மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீதர் நாராயணன் (“Fear of Scandal” ) (more…)

மாடர்ன் லவ் ஸ்டோரி

எஸ். சுரேஷ்

“இன்னிக்கி ராகுல் என்கிட்டே ‘ஐ லவ் யூ ’ சொன்னான்” என்றாள் வர்ஷிதா

“அவனுமா?” என்றேன் நான். “நீ என்ன சொன்ன?”

“சாரி சொன்னேன். ‘உன்ன நான் ரிஜெக்ட் பண்ணல. நீ சொன்னத ரிஜெக்ட் பண்றேன்’ன்னு சொன்னேன்”

“ஆஹா. இவங்க எல்லாரும் சேந்து உன்ன ஒரு தத்துவஞானி ஆக்கிடுவாங்க போல இருக்கு” என்று சொல்லிவிட்டு சிரித்தேன். “இந்த ஆபிஸ் சேர்ந்தப்புறம் இது என்ன மூணாவது பிரபோஸலா? நீ எங்கயோ போற போ”

“சும்மா கிண்டல் பண்ணாதடா. வெறுப்பா இருக்கு. ஒரு ரெண்டு நாள் சிரிச்சு பழகினா போதும் பிரபோஸல்லோட வந்துடறாங்க”

வர்ஷிதாவும் நானும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். எங்களுக்குள் காதல் மலராது என்று சொல்லாமலே இருவருக்கும் தெரிந்து விட்டது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவளுக்கு நான்தான் முக்கியமான நண்பன். நடக்கும் எல்லா விஷயங்களையும் என்னிடம் கூறுவாள்.

“சரி விடு. அரசியல்ல இதெல்லாம் சகஜம்தான். வேற என்ன விஷயம்?” (more…)

காமமோ பெரிது?

எஸ். சுரேஷ்

‘சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவ சிறிது காமமோ பெரிதே”
தூக்கம் வராமல்
புலம்பிக் கொண்டிருந்தாள்
சங்க நாயகி
“அம்மா தாயே, கொஞ்சம் வாயை மூடறையா,
உன் குரல் கேட்டு ஒரு எலிகூட வெளியில வரல”
கூரை மேல் அமர்ந்திருந்த ஆந்தை
அவளைக் கடிந்து கொண்டது
“உன் காம நோயோ பெரிது ஆனால்
என் வயிற்றுப் பசி அதைவிடப் பெரிது”