சந்தோஷ ஊற்றுகள்

ஸ்ரீதர் நாராயணன்

காலைக் கட்டிக்கொண்டு
தூக்கச்சொல்லும் பரிதவிப்பு,
தோளின் மீதேற்றிக்கொண்டதும்
விகசிக்கிறது பூரிப்பில்.

முதுகில் ஏற்றிக்கொண்டு
குதிரையோட்டம் ஓடும்போது
மகிழ்ச்சி கெக்கலிப்பாகிறது

கழுத்தைச் சுற்றி வளைத்து
கரணம் போடவைத்து
தரையில் இறக்கியதும்
குதியாட்டம் போட்டு
கூத்தாடுகிறது.

மறுபடியும்…
மறுபடியும்…
மறுபடியும்…

சலிப்பதேயில்லை எங்களுக்கு.

ஒவ்வொருமுறையும்
கொள்ளை கொள்ளையாய்
சந்தோஷங்களை ஊற்றெடுத்தபடி
அவளுக்கும்,

அப்படி சந்தோஷிப்பதை
கற்றுக்கொள்ள வேண்டியபடி
எனக்கும்.

ஒளிப்பட உதவி- Timothy Raines

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.