– காஸ்மிக் தூசி –
நீறேற்றும் குழாயொன்று
நீண்டு செல்கிறது
பீடத்தின் மேல்
ஒருவீட்டின் மூலையை
இடவலமாய் மாற்றிச்சென்று
தன் தடத்தில்
அசையாமல் நின்றபின்
விருட்டென
ஏறிச்செல்கிறது
மேல்நோக்கி.
சுவரோடு ஒட்டிநின்று
இரட்டித்து
மீண்டும் முறுக்கித் திரும்பி
நிறுத்தத்திற்கு வருகிறது
திடீரென.
எம்மாதிரியான
சூழலில் இருக்கிறோம்
என்ற அறிதல் இல்லாமல்
கழுத்தில்லா எலிபோல
சாவியற்று நிற்கும்
பித்தளையின்
திறப்பு ஒன்று
நெடுந்தூர உறுதியை
கொண்டுவந்து சேர்க்கிறது
முக்கியமான தொரு
முடிவுக்கு
வாழ்நாள் முழுதையும்
வறண்டு போன
நீரடியில்
கழிக்க வேண்டி.
***
(அருண் கொலாட்கர் எழுதிய Water Supply என்ற கவிதையின் தமிழாக்கம்)