இந்த ஐந்து மலைகள்தான்
கந்தோபா கொன்ற
ஐந்து பூதங்கள்
என்கிறான் பூசாரியின் மகன்
பள்ளிவிடுமுறை நாட்களில்
வழிகாட்டியாக வரும்
சிறுவன்
அந்த கதையை
நீ உண்மையிலேயே
நம்புகிறாயா என்றால்
அவன்
பதில் சொல்வதில்லை
தோள்களை குலுக்கியபடி
சங்கடத்துடன்
வெறுமனே பார்க்கிறான்
வேறெங்கோ
ஒழுங்கற்று வளர்ந்து
வெயிலில் வறண்ட
கற்றைப்புல்லின் மேல்
அசைவின்
ஒரு கண்சிமிட்டலை
காண முடிகிறது
அவனால்
அங்கே பாருங்கள்
பட்டாம்பூச்சி
என்கிறான்.
00
அருண் கொலாட்கரின் The Priest’s Son என்ற கவிதை தமிழாக்கம்
..
ஒளிப்பட உதவி – i Share