என்னது?
சட்டையை
கழற்றிவிட்டு
பூஜை செய்ய
போகவா?
நன்றி வேண்டாம்.
என்னால் ஆகாது
நீங்கள் விரும்பினால்
தாராளமாக போகலாம்.
போகும் முன்
தீப்பெட்டியை தருகிறீரா?
புகைத்தால்
யாரும்
பொருட்படுத்தாத
முற்றத்தில்
வெளியே
இருக்கிறேன் நான்.
000
அருண் கொலாட்கரின் Makarand என்ற கவிதை மொழிபெயர்ப்பு