தமிழாக்கம் – ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “கோடை” – நகுல்வசன்

நகுல்வசன்

இதுவரையிலும் இல்லை.
மாமரத்தின் கீழே
அனாதை நெருப்பின் குளிர்ச்சாம்பல்.

யாருக்கு வேண்டும் எதிர்காலம்?

சச்சரவுக் காகங்கள்
அமைதியாய் கூடும்
அன்னையின் கூந்தலை
பத்து வயது சிறுமியொருவள்
சீவுகிறாள்.

ஒருபோதும் அவளுக்குச் சொந்தமாகாது
இவ்வீடு.

அவள் மனதின் ஏதோவொரு மூலையில்
உயிர்த்திருக்கும் பச்சை மாங்காயொன்று
மண்ணில் வீழ்கிறது மென்மையாக.

oOo

ஆங்கிலத்தில் – “Summer”, Jayanta Mahapatra

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.