எதையோ பார்த்து சிரிக்கும் சுருக்கங்களே முகமான கிழவி தூரத்தில் கதவு மூடும் ஓசை பச்சை புல்வெளியில் சூரிய கதிர்கள் பட்டு சிதறும் கனவுகள் வட்டமான சூரியனை சதுரமாக மாற்றும் கண்ணாடி யாரும் திறக்கத கதவு ஒன்று 'அருகே வா' என்று இடைவிடாது அழைக்கும் நதி இல்லாத ஒருவனை நினைத்து ஏங்கும் பெண்ணொருத்தி கிணற்று தண்ணீரை நோக்கில் வேகமாக விரையும் கல் பழைய நினைவுகளில் உறைந்த புன்னைகை ஆசைகள் மேல் தூசு படிந்த புகைப்படம்