கல்யானைகள் மதம்பிடித்து அலைகின்றன இரை எடுக்க சித்தரின் சிரிப்பையும் கரும்பையும் உதாசீனம் செய்து. சித்தரோ எனில் புன்னகை துறந்து பொன்னணையாளின் நம்பிக்கையுடனும் பொன்னுடனும் நீங்குகிறார் திருப்பூவனம். எதிர் ஏற முடியாமல் தத்தளிக்கின்றன ஏடுகள் திரு ஏடகத்தில். பிரம்மாண்டமான ஆலவாய்க் கோவில் பிரகாரங்களில் கொலையும் சூதும் மணமும் பேசி முடித்து நீண்ட பகலில் உறங்குகிறார்கள் கல்தளங்களில் இருண்ட மனிதர்கள். ஓடுகாலில் கொலையுண்ட அடையாளம் அற்றவனின் அங்காத்த வாயில் படிந்து செல்கிறது வையை மணல் பயணமாய். This Moment Spurning The Ascetic's smile and cane Stone elephants in rut roam in search of prey. The Ascetic meanwhile renounces laughter and removes to Thirupuvanam with Ponnanaiyaal's Faith and Gold. Unable to tide against the current the palmyra-scripts bob helplessly in Thiruvedakam. In Madura's massive temple courtyards of stone Dark saturnine men sleep through the long day Having shaken hands on Murder, Plots, and Matrimony. Through the gaping mouth of the murdered Anonymous runaway wend the journeying Sands of Vaikai.
This post was changed on March 11th, 2016, following the comments of சரவணன் . Original version of this translation is here – this moment
இங்கே சூது என்றாரல் gambling-ஆ? சதிச்செயல்களைத் திட்டமிடுவது என்று நினைக்கிறேன். Treason, treachery போல.
நன்றி, சரவணன். தாங்கள் சுட்டும் பொருளே பொருத்தமானது, அதைக் கருத்தில் கொண்டு மொழியாக்கம் இப்போது திருத்தப்பட்டுள்ளது.
இப்ப எல்லாம் சரியா இருக்கா?