என்ன பறவையென்று தெரியவில்லை
இருள் மேனி அந்தி வண்ண விழிகள்
மாலையிலிருந்து அப்படியே உட்கார்ந்திருக்கிறது
வானத்தை மறந்துவிட்டதா
இல்லை தானொரு பறவையென்பதையே மறந்துவிட்டதா
நள்ளென்ற யாமத்தில் மனசு கேட்கவில்லை
மொட்டைமாடிக்கு சென்றேன்
அப்போதுகூட அது
பறவைநிலைக்கு திரும்பியிருக்கவில்லை
நெருங்கிச் சென்று
மெல்ல கையில் தூக்கி பறக்கவிட்டேன்
பறக்கப் பறக்க மீண்டும்
அதேயிடத்திற்கே
வந்துகொண்டிருந்தது அந்தப் பறவை
நானும் நிறுத்தவில்லை
அருமை