Author: பதாகை

காத்திருத்தல்

-அதிகாரநந்தி-

பொறுப்புகள் எல்லம் முடிந்தாயிற்று

பேரன் பேத்திகள் பார்த்தாயிற்று
அவளும் போய்ச் சேர்ந்தாயிற்று
போதும் போதும்
மானசீகமாக ஒரு நன்றி
இதுவரை பலம் கொடுத்ததற்கு

பெரியவர் கண் மூடி
இருந்தார்

மறுபிறப்பு பயம் மட்டும்
அடி ஆழத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது

*************

எத்தனையோ
பேருந்து நிறுத்தங்களில்
தெரு முனைகளில்
தேர்வு மையங்களில்
அவனுக்காக நான் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்

தாமதத்தை அவன் கொள்கையாகவே
வைத்துக் கொண்டிருந்தான்

நாங்கள் மீண்டும் சந்திக்கும்போது
அவன் கேட்கக்கூடும்
“கொங்கப்பன்மவனே! உனக்காக எத்தன
நாள்தான் காத்துக்கிட்டிருக்கிறது”

ஒரு நாள் முடிகிறது

-கமலாம்பாள்-

end of days

ஒளி
கரைந்து வழிகிறது
வீடுகளின் இடுக்குகள் வழியாக,
யாரும் நின்றுகொண்டிருக்காத
மாடிகள் மேலாக,
சாலையோர மரங்களின்
இலைகளின் மறைவாக
பூச்சிகள் கலைகின்றன
பறவைகள் நகர்கின்றன
அடைத்த கதவுகளுக்கு வெளியே
இரவு நிலவுடன் காத்திருக்கிறது.

ஒளிப்பட உதவி : ikdienas romantika

வித்தைக்காரனின் வெஞ்சினம்

Stephen Leacock
தமிழாக்கம்- ஸ்ரீதர் நாராயணன்

Stephen Leacock இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கில இலக்கிய உலகில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட நகைச்சுவையாளர். பரிகாசம் விரவிய விமர்சனங்களில் பொதுபுத்தி மடமையை சாடுவது அவரின் சிறப்பு. ஸ்டீஃபன் லீகாக் நினைவாக ‘நகைச்சுவையாளர் பதக்கம்‘ தொடர்ந்து 65 வருடங்களாக வழங்கப்படுகிறது. The Conjurer’s revenge நூற்றாண்டு பழமையான புனைவாக இருந்தாலும் இன்றைய காலத்திற்கும் பொருந்தி வரும் கதையாக அமைந்திருக்கிறது.

conjurer-revenge

ப்பொழுது சீமாட்டிகளே, கனவான்களே” சொன்னான் வித்தைக்காரன் “இந்த துணியில் எதுவுமில்லை என்று உங்களிடம் காட்டியபடிக்கு, இதிலிருந்து தங்கமீன்கள் கொண்ட ஒரு நீர்க்கிண்ணத்தை எடுக்கப்போகிறேன். ப்ரெஸ்டோ!”

அந்தக் கூடம் முழுவது மக்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள், ‘ஆ! என்ன அற்புதம்! எப்படி இதை செய்கிறான்?’

ஆனால், முன் இருக்கையில் இருந்த துரித பேர்வழி, தன் அருகே இருப்பவர்களிடம் சத்தமாக கிசுகிசுத்தான் “அவன்-கைக்குள்-ஒளித்து-வைத்திருந்தான்” (more…)

சாமானியங்களின் முகங்கள்

நம் அனைவராலும் அழகான ஓவியங்கள் வரைய முடியாது – ஆனால் அழகான போட்டோக்கள் எடுக்க முடியும். தொழில்நுட்பம் அழகிய ஆர்டிஃபாக்ட்டுகளை எல்லாரும் உற்பத்தி செய்யலாம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.

ஆனால் எது அழகு, எது கொண்டாடத்தக்கது என்ற கேள்விகளை நாம் யாரும் கேட்டுக் கொள்வதில்லை. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியே பதாகை, “சாமானியர்களின் முகங்கள்” என்ற புகைப்படத் தொகுப்பு.

விளிம்பில் உள்ள விஷயங்களை மையத்துக்குக் கொண்டு வரும் முயற்சி இது. எது அழகு, எது புகைப்படம் எடுக்கத்தக்கது என்ற சிந்தனையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட படங்கள் இவை.

இந்த வாரப் புகைப்படக் கலைஞர் திரு. விக்டர் லிங்கன் அவர்கள்.

This slideshow requires JavaScript.

audio credit: Moogies Bloogies, Delia Derbyshire & Anthony Newley, Ubuweb

உண்மைகள், ஆனால் வெட்கங்கெட்ட பொய்கள்

பீட்டர் பொங்கல் –

Kurt Vonnegut எழுதிய Cat’s Cradle, 1960களின் அமெரிக்க எதிர்கலாசாரத்தைக் கட்டமைத்த மிக முக்கியமான பிரதிகளுள் ஒன்று. இதில் வரும் பொகொனிய சமயம், பெறும் வாதையிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைப் பொய்களால் பெற்று, மனிதன் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் கொள்ள இயலும் என்று எண்ண வைக்கும் வோனகட்டிய தரிசனம்.

பொகொனிய முதல் நூலும், அதன் அந்திமக் கிரியையான சேற்றுப்பாடலும் பதாகை வாசகர்களுக்காக இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் நூல்

நான் சொல்லப்போகும் உண்மைகள் அனைத்தும் வெட்கங்கெட்ட பொய்கள்.

முதலில் கடவுள் மண்ணைப் படைத்தார். பிறகு, அதைத் தன் அண்டத்தனிமையில் கண்டார்.

“சேற்றைக் கொண்டு உயிரினங்ளை உருவாக்குவோம், இந்தச் சேறு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று பார்க்கட்டும்” என்றார் கடவுள். அசைவன அனைத்தையும் படைத்தார், அவற்றிலொன்று மனிதன். மனிதனான  சேறு மட்டுமே பேச முடிந்த உயிரினம். (more…)