எழுத்து

பாம்புப் படலம்

– எஸ். சுரேஷ் –

“மாமி இங்க வாங்கோ. சீக்கிரம் வாங்கோ” என்று மீனா மாமியின் குரல் கேட்டது.

“என்ன ஆச்சோ. மாமி இப்படி கத்தறா” என்று கூறிக்கொண்டே அம்மா முன் பக்கம் சென்றாள். நானும் அம்மாவுடன் சென்றேன். நாங்கள் அப்போது சிகந்திராபாத் நியூ போயிகுடாவில் ஒரு பெரிய வீட்டின் பின்பக்கத்தில் குடியிருந்தோம் பத்மநாபா மாமாவும் முன் பக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள்.

“என்ன ஆச்சு மாமி?” என்று அம்மா மீனா மாமியைக் கேட்டாள்.

“பாம்பு வந்திருக்கு மாமி”

“பாம்பா? எங்க?”

“அதுக்குள்ள இருக்கு,” என்று மீனா மாமி வாட்டர் மீட்டர் இருக்கும் குழி பக்கம் கை காட்டினாள். வாட்டர் மீட்டர் இரண்டடிக்கு இரண்டடி சதுர, பக்கவாட்டில் சிமெண்ட் பூசப்பட்ட குழிக்குள் இருக்கும். அந்தக் குழியின் மேல் சதுரமான தகர மூடி இருக்கும். அது சரியாக\ குழியின் மேல் உட்காராததால் குழிக்கும் மூடிக்கும் நடுவிலிருந்த இடைவெளி வழியாக பாம்பு உள்ளே சென்றுவிட்டது, (more…)

இல்லாகிய இல்லறம் – ஆங்கில புனைவுகளில் ‘செயலிழந்த குடும்பங்கள்’ ​ (Dysfunctional families in ​ fiction)

– அஜய் ஆர். –

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way”, என்கிறார் தல்ஸ்தோய். குடும்பத்தை, அந்த அமைப்பில் உள்ள சிக்கல்களைப் பற்றிச் சொல்வதற்கு எப்போதும் ஏதேனும் மிச்சமிருப்பதாலதான், ஒப்பீட்டளவில் குடும்பம் சார்ந்த புனைவுகளே பிற வகைப் புனைவுகளைவிட அதிகம் எழுதப்பட்டு வருகின்றன.

‘குடும்ப நாவல்’ என்பதின் வரையறை என்ன? வெகுஜனப் புனைவுகளில் இது எளிய சூத்திரமாக வெளிப்படுகிறது-. நன்றாக வாழ்ந்த குடும்பம் (பணம் இல்லாவிட்டாலும் மனதளவில் நிம்மதியாக), புதிதாக வரும் ஒருவரால், அல்லது புதிதாக ஏற்படும் பழக்கத்தால் சீரழிவது, பிறகு தீயவர் திருந்தி அனைவரும் ஒன்று சேர்வது இந்தப் புனைவுகளின் பாணி (trope). தமிழில், மருமகள் குடும்பத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்பாக வருவதை (மனைவி பேச்சைக் கேட்டு வயதான பெற்றோரை துரத்தி விடும் அல்லது கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லும் மகன்) இன்றுவரை நாம் படித்தும்/ தொலைகாட்சியில் பார்த்தும் வருகிறோம். இதற்கு நேர்மாறாக கொடுமைக்கார மாமியார், தீய பழக்கங்கள் கொண்ட கணவன் இவர்களிடம் சிக்கி, பொறுமையாக அனைத்தையும் சகித்து அவர்களைத் திருத்தும் மருமகளும் வெகுஜனப் புனைவுகளுக்கு பிரியமானவரே. ஆனால், குடும்பம் என்ற அமைப்பின் ஆழத்தை இவை நமக்கு காட்டுவதில்லை. (more…)

பாம்பு புகுந்த வீடு

ஹரன் பிரசன்னா –

 

தன் வீட்டிலிருந்து
என் வீட்டுக்கு
ஜன்னல் வழியே
பாம்பு புகுந்துவிட்டதென
கூவிக்கொண்டே வந்தார்
பக்கத்து வீட்டுக்காரர்
அலறல் கேட்டு
வீட்டிலிருந்து வெளியே ஓடினேன்
அவரைப் பார்க்க அச்சமாக இருந்தது
அவர் கால்கள் சூம்பிக் கிடந்தன
என் நினைவில் அவர் அப்படி இருந்திருக்கவில்லை
என்ன அரவமென வீட்டிலிருந்து
மனைவி ஓடி வெளியே வந்தாள்
என்னைக் கண்டு மிரண்டு நின்றபோது
அவளைக் கண்டு நான் பயந்து நின்றேன்
அவள் கழுத்து நீண்டு கிடந்தது
இதுவரை இப்படி அவளைக் கண்டதில்லை
மீண்டும் வீட்டுக்குள் அவள் ஓடி
மகனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்
மகன் எல்லாரையும் பார்த்து வீறிட்டு அழுதான்
மகனின் கண்ணில்
நேற்றுவரையிருந்த புருவங்களில்லை
பலர் வந்தார்கள்
ஒருவரை ஒருவர் அஞ்சினோம்
வீடெங்கும் சல்லடையிட்டுத் தேடினார்கள்
பாம்பைக் காணாமல்
அவரவர் வீடு சென்றார்கள்
நாங்கள் எங்கள் வீட்டுக்குச் சென்றோம்
ஆளுக்கொரு பாம்புடன்.

திறந்த புத்தகம்

the open book

 

ஒளிப்படம் – விக்டர் லிங்கன்

போயிகுடாவின் மாரடோனா

– எஸ். சுரேஷ் –

“மாரடோனா ஆடினத பாத்தீங்களா பாய்? ஒருத்தனா இருந்து ஜெர்மனிய தோக்கடிச்சிருக்கான் பாருங்க. என்ன ஆட்டம் நேத்தி. நம்ப எப்போதான் புட்பால் சூப்பர் பவர் ஆவோமோ. எப்போதான் நம்ப ஊர்ல ஒரு மாரடோனா பிறப்பானோ?” என்று ஆதங்கத்துடன் பஷீர் பாயைக் கேட்டேன். இரவு நாங்கள் எல்லோரும் அர்ஜென்டினா – ஜெர்மனி உலக கோப்பை இறுதி ஆட்டத்தை பார்த்தபின் மாரடோனாவின் மேல் எங்கள் எல்லோருக்கும் மரியாதை பெருகியிருந்தது.

“நம்ப ஊர்ல என்னடா? நம்ப காலனியிலேயே ஒரு பெலே, ஒரு மாரடோனா அளவுக்கு ஆடற ஒரு ஆள் இருந்தான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் பஷீர் பாய்.

“நம்ப போயிகுடாலையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் புஜ்ஜி

“ஆமாம். போயிகுடாலதான். உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ஆளுதான்” என்றார் பஷீர் பாய் (more…)