கவிதை

நீங்கள் கைதூக்க அல்ல இக்கேள்வி

– பெருந்தேவி –

பொதுக் கழிவறைச் சுவர்களில்
கலை ஆர்வத்தோடு
கணவனைப்
படம்போட்டு பாகம் குறிக்க
எந்தக் கண்மணிதான்
நினைப்பதில்லை?

நிறப்பிரிகை : ஒன்று – ச்யாமளம்

சரவணன் அபி

அடர்
ஆதி வெம்மையினின்று
ஒழுகி வந்த
ஒற்றை முலையமுதம்
ச்யாமளம்

கனவின் ஆழம்
அறியமுடியா உன்னதம்

பேதமறியா
அந்தக உலகின்
அந்தமில்லா வாசி
சியாமளீ

இன்னும் பின்னும்
தேடியடைய
விழையும் கருக்கூடு
ஆடி அடங்கும் புலன்
சாயும் மடி ச்யாமளம்

Art, naturally

Alexander-Calder-Vertical-Foliage-mobile

 

Announcing spring
the birches hopefully shoot forth
Suerat’s pointillistic follies.

Portending winter
desolate oaks precariously dangle
Calder’s mobiles.

Only for an instant,
the raptures of art.

Then, forever,
the boring profusion
and empty ruins
of mere nature

oOo

ஒளிப்பட உதவி – Marco Mahler

மறைந்து…

– மோனிகா மாறன் –

நாமாக அலைந்து
நானாகிப் போன அந்த
குளிர் இரவில்
நம்மிடையே அமர்ந்திருந்தது

நடுங்கிய என் விரல்களில்
அடங்காமல்
வழிந்தோடிய
இதழ்களில்,

கங்குலில் மறைந்திருக்கும்
தான்றி மரத்தின்
காய்ந்த விதைகளில்

உதிரச்சுவையறிந்த
வேங்கையின
நாவில்

அசையும் தூளியிலிருந்து
நீளூம் காலின்
வெள்ளிக் கொலுசொலியில்

பொங்கும் யவனத்தின்
பூரிப்பில்

ஸ்பரிசங்களும்
களைதல்களும் ஒன்றான
மௌனத்தில்

நீர்த்தாரைகள் ததும்பும்
ஏரிக்கரை சதுப்பின் வாசத்தில்

கருவறையில்
அமுதுணவில்
நீள்மூச்சில்
நெடுங்கனவாய்
நிறைந்திருந் தது

எட்டிப் பார்த்த முதல் நரையில்
கிறுகிறுத்து விழுந்த நான் அறிகிறேன்
அது நமக்குள் உறைந்திருந்த மரணத்தின்
முதல் சாய லென்று

இலக்கிய விசாரம்

– பெருந்தேவி –

பைங்கிளிக்
கதைகளில் வரும்
பைங்கிளியைத் தேடி
தாடி
தீவிர இலக்கிய
வாதி