– நரோபா –
பூம்.. பூம்பூம்..பூம்..பூம்பூம்.. ..உறங்கிக் கொண்டிருக்கும் வனமிருகத்தின் மூச்சொலி போல் சீரான நிதானத்துடன் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது உடுக்கையொலி. மெல்லிய எதிரொலியாக தூரத்து பறையோசை ஒலித்துக் கொண்டிருந்தது. மருலாளி கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் போல் வேப்பமரத்தடி மேடையில் அமர்ந்திருந்தார். நரைத்த வெள்ளி தலைமயிர், உடலுக்குள் இருக்கும் நீரை எல்லாம் ஒட்டுமொத்தமாக உறிஞ்சி எடுத்தாற்போல் வறண்டு மெலிந்த தேகம். அடர் கருப்பு தேகத்தில் சிறு கீறல்களாக பழுப்பு ரேகைகள் வயிற்றில் ஓடின. காவி வேட்டியும் செவ்வரளி மாலையும் அணிந்திருந்தார். காலுக்கு கீழே நான்கைந்து பிரம்மாண்டமான கரிய வெட்டருவாள்கள் கூர் மூக்குடன், அவர் கால்களைத் தீண்ட படமெடுத்து காத்திருந்தன. சிவந்த நாக்கை நீட்டி எதையோ விழுங்க காத்திருக்கும் தீ, பந்தத்தின் நுனியில் நின்றுகொண்டு காற்றில் இரையை தேடி துழாவிக் கொண்டிருந்தது. (more…)