விமர்சனம்

David Mitchell – நாவல் வடிவங்கள்/ வகைமைகளைக் கடந்து செல்லும் கதைசொல்லி

அஜய் ஆர்

அறிவியல்/ குற்ற/ அதிபுனைவுகளை ழானர் எழுத்து என்று வகைப்படுத்தி, அவற்றை இலக்கியப் புனைவுகளிடம் இருந்து வேறுபடுத்தக் கூடாது என்றும், எந்தப் புனைவாக இருந்தாலும் அதன் தரம் மட்டுமே அதற்கான இடத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் பேசும் குரல்கள் பல காலமாக இருந்து வந்துள்ளன என்றாலும், இது குறித்த விவாதங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.. Guardian இதழில் இது குறித்து இந்த வருடம் நடந்த தொடர் விவாதங்களின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

ழானர்- இலக்கிய எழுத்துக்கள் என்ற வேறுபாடு இன்னும் தொடர்ந்தாலும், இலக்கியப் படைப்பாளிகள் என்றழைக்கப்படுபவர்களில் சிலர் ழானர் எழுத்துக்களை சாதகமாகவே பார்க்கிறார்கள். “I lament what I take to be a trend against the genres. It might well be agreed that the best of serious fiction, so to call it, is better than anything any genre can offer. But this best is horribly rare, and a clumsy dissection of the heart is so much worse than boring as to be painful, and most contemporary novels are like spy novels with no spies or crime novels with no crimes, and John D. MacDonald is by any standards a better writer than Saul Bellow, only MacDonald writes thrillers and Bellow is a human-heart chap, so guess who wears the top-grade laurels?” என்கிறார் Kingsley Amis. (more…)

கவியின் கண்- மேலாண்மைப் பண்புகள்

ஆன்மாக்களைக் காத்தல்
                          — டெனிஸ் லேவர்டாவ்
 
துக்கங்களுக்கும் கனவுகளுக்கும்
பொறுப்பேற்றுக் கொண்டவன்
 
அடுத்த வயல் நோக்கி
மிகக் கவனமாக.
 
தன் மந்தையைச் செலுத்துகிறான்.
கோவில் மணியோசை
 
கேட்டு விட்டான்.
ஆனால் ஆடுகள்
 
புல்லுக்குப் பசித்திருக்கின்றன,
இன்றும் ஒவ்வொரு நாளும்.
 
அவனது பொறுமை, அழகியது. 
நீண்ட அவன் நிழலும், 
 
சமவெளியூடே. மந்தைகள் 
அலையலையாய்ச் செல்லும் 
 
ஓசையும்.
 
௦௦௦
 
‘தலைமைத் திறன்கள்’: நிர்வாகத்துறையில் இருப்பவர்கள் இந்தச் சொற்களைப் பல முறை கேட்டிருப்பார்கள்.  அதிலும் குறிப்பாக, உங்களுக்கு ஐடீ துறையில் அனுபவமிருந்தால் இவை மிகவும் பழக்கப்பட்டுப்போன சொற்களாய் இருக்கும். முன்னெல்லாம், தலைமைப் பதவியில் மிகக் குறைவானவர்கள்தான் இருப்பார்கள்- ஆனால் இப்போது, அதிலும் குறிப்பாக தகவல்தொழில்நுட்பத் துறை, அனைவரும் தலைமைப் பதவிக்குத் தயாராக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தலைமைக்குரிய பண்புகளை உருவாக்கிக் கொண்டாக வேண்டியிருக்கிறது. முன்னெல்லாம், ஒரு பணியில் பத்தாண்டுகள் நிலைத்திருந்தால், குமாஸ்தாவாக வேலைக்கு வந்தவன் படிப்படியாக முன்னேறி தலைமை குமாஸ்தா இருக்கையில் அமர்வான். ஓய்வு பெறுவதற்கு முன் ஜெனரல் மானேஜராகவோ அடிஷனல் ஜெனரல் மானேஜராகவோ இருந்தால் அது ஒரு மகத்தான சாதனையாக இருக்கும். வைஸ் பிரசிடண்ட் ஆவதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. சீப் மானேஜிங் டைரக்டர்கள் வேற்று உலகத்திலிருந்து வந்தவர்கள்.

(more…)

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 1

-பீட்டர் பொங்கல்-

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )

நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நிகழ்த்தப்படும் உரையாடல்களின் பின்னணியில் ஓங்கி நிற்கும் இறுகிய முகம் மாக்ஸ் வெபருக்கு உரியது. அதைவிடச் சற்றே மகிழ்ச்சியான முகம் கொண்ட சார்லஸ் டெய்லரும் அங்குண்டு. மலர்ந்த முகம் கொண்டவரும் உண்மைகளை அப்பட்டமாய் பேசுபவரும், கரிக்கோல் ஏந்தியிருப்பதாய் குற்றம் சாட்டப்படுபவருமான லுட்விக் விட்கென்ஷ்டைனும் இவர்களுடன் இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

இது நினைத்தே பார்க்க முடியாத தேர்வு என்ற எண்ணம் எழலாம். காரணம், விட்கென்ஷ்டைன் மாயத்தன்மை குறித்து அதிகம் எழுதியதில்லை. மேலும், மொழியின் பிழை புழக்கத்தால் ஏற்பட்ட மயக்கங்களை, தத்துவத்துறைக் கருவிகளைக் கொண்டு கலைத்து வசியமிழக்கச் செய்தவர் என்றுதான் அவரைப் பற்றி பெரும்பாலும் கருதப்படுகிறது. அவரே எழுதியதுபோல், “மொழியினால் ஏற்பட்ட நம் அறிவு மயக்கத்துக்கு எதிரான போராட்டம்தான் தத்துவவியல்” “Philosophy is a battle against the bewitchment of our intelligence by means of language”). (more…)

கார்ல் ஹையசனின் நகைச்சுவைக் குற்றப்புனைவு

அஜய் ஆர்

பதாகையில் மொழிபெயர்க்கப்பட்ட “நகை எனும் மெய்ப்பாடு” என்ற பதிவின் மூல கட்டுரை, இவ்வாறு ஆரம்பிக்கிறது- “When moral or political decisions are at stake, we often make use of catch-phrases drawn from a repertoire of available drama and literature. For we understand that both our actions and how they are perceived depend on how we frame them. Comedy, of all genres, appears to be the one we covertly use all the time without, meanwhile, fully appreciating its ability to portray and explore the intensity and integrity of our interactions with others. “

இயன் ரேங்கின் (Ian Rankin) குற்றப்புனைவுகள் பற்றிப் பேசும்போது “But the best crime fiction today is actually talking to us about the same things big literary novels are talking about. They are talking about moral questions, taking ordinary people and putting them in extraordinary situations, and saying to the reader, “How would you cope in this situation?” என்கிறார். அன்றாட வாழ்வில் “தார்மீகத்தை” கடைபிடிக்க முயலும்போது மனிதனுள் எழும் கேள்விகள், அவன் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசும் இந்த இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே புள்ளியில் இணையும்போது நகைச்சுவைக் குற்றப்புனைவு (comic crime fiction) என்ற வகைமை உருவாகிறது. (more…)

விரும்பி வாசிப்பவை

நந்தா குமாரன்

nundhaa

“நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் யார், விரும்பும் கவிதைகள் எப்படிப்பட்டவை?”

முதலில் இந்த “மழை கேட்டல்” கவிதையைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இது “கணையாழி” பத்திரிக்கையில் April 1998இல் வெளியானது. அப்போது ஞானக்கூத்தன் கவிதைத் தேர்வு செய்து கொண்டிருந்தார். பின்னர் ஒரு தினம் அம்பலம் இணைய அரட்டையில் சுஜாதா இந்தக் கவிதை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.

இப்போது கேள்விக்கு வருவோம். வழக்கமான பதில் தான், எனினும் சொல்கிறேன். நம் ஜனத்தொகையில் பாதி பேருக்கு மேல் கவிஞர்களாகவே பிறப்பெடுக்கிறார்கள், எழுதியும் குவிக்கிறார்கள். எனவே நாம் படிப்பவற்றுள் பாதிக்கு மேல் கவிதையாகவே இருக்கும் … நாம் விரும்புகிறோமோ இல்லையோ கவிதையை வாசிக்காமல் இருக்க முடியாது. கவிதைக் கடல் என்பதை விட இங்கே இருப்பது கவிஞர்களின் கடல் என்பது தான் பொருத்தம். நல்ல வேளை புத்திசாலித்தனமாக “விரும்பி வாசிக்கும்” எனக் கேட்டீர்கள். (more…)