காஸ்மிக் தூசி

வரைபடம் அல்லது சதுரங்க கட்டம்

காஸ்மிக் தூசி

* Checkerboard Tombstone *

வரைபடம் (அல்லது) சதுரங்க கட்டம்

சதுரங்க கட்டங்கள் –
எவரோ கிழவர்கள்
வரைந்திருக்க வேண்டும்
நேற்று

சுண்ணக்கட்டியால்
இருபதடி நீளமுள்ள
ஆமையின் முதுகில்

தேய்ந்து அழிந்து
மங்கலாகிக்கொண்டிருக்கும்
ஓடி விளையாடும்
குழந்தைகளின்
வெறுங்கால்களின்
கீழே

 

அருண் கொலாட்கரின் The Pattern என்ற கவிதை தமிழாக்கம்

தாழ்வான கோவில்

காஸ்மிக் தூசி –

Low Temple-image-1

கடவுள்களை
இருளில் வைத்திருக்கிறது
தாழ்வான இந்தக்கோவில்
பூசாரியிடம்
தீப்பெட்டி இரவல்தர
ஒவ்வொருவராக
வெளிச்சத்துக்கு வருகிறார்கள்
கடவுள்கள்

ஸ்வாரஸ்யத்துடன் பார்க்கும் பஞ்சலோகம்
புன்னகைக்கும் கருங்கல்
ஆச்சரியம் ஏதுமற்ற
இன்னொரு கடவுள்

தீக்குச்சி எரியும்
இடைவெளியில்
சைகைகள்
உயிர்த்தெழுந்து மறையும்
ஒவ்வொன்றாக

தோன்றி மறையும்
அபிநயம்
மீண்டும் மறையும்

அந்த சாமி யார்
எனக் கேட்டால்
எட்டுக்கை அம்மன்
என்கிறான் பூசாரி

சந்தேகமாக இருமுகிறது
ஒருதீக்குச்சி
எண்ணிப்பார்த்தால்
கைகள் பதினெட்டு

எதிர்த்துக்கேள்வி கேட்டால்
இருக்கலாம் ஆனால்
இது எட்டுக்கை அம்மன்தான்
என்கிறான் பூசாரி

வெளியே
வெய்யிலுக்கு வந்து
சார்மினார் சிகரெட்டை
பற்ற வைத்தால்
இருபதடி
ஆமையின்மீது
ஏறி விளையாடிகொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள்.

***

(அருண் கொலாட்கர் எழுதிய A Low Temple என்ற கவிதையின் தமிழாக்கம்)

சைதன்யா

காஸ்மிக் தூசி –

image

போதும் நிறுத்து
என்றான் ஒரு கல்லிடம்
சைதன்யா, கல்லின் மொழியில்

ஒரு சாதாரண
பாறையாக இருப்பதில்
என்னதான் பிரச்சினை

உனக்கு
சற்றும் பொருந்தவில்லை
இந்த நிறம்
முகத்திலிருக்கும்
சிவப்பு சாயத்தை
துடைத்தெறி முதலில்

எப்படியானும்
செவ்வந்திப்பூக்களை சூட்டுவேன்
உனக்கு. அவற்றை
உனக்கு பிடிக்குமல்லவா
எனக்கும்தான்.

***

(அருண் கொலாட்கர் எழுதிய Chaitanya என்ற கவிதையின் தமிழாக்கம்)

நீரடி

காஸ்மிக் தூசி –

water supply

நீறேற்றும் குழாயொன்று
நீண்டு செல்கிறது
பீடத்தின் மேல்

ஒருவீட்டின் மூலையை
இடவலமாய் மாற்றிச்சென்று
தன் தடத்தில்
அசையாமல் நின்றபின்

விருட்டென
ஏறிச்செல்கிறது
மேல்நோக்கி.

சுவரோடு ஒட்டிநின்று
இரட்டித்து
மீண்டும் முறுக்கித் திரும்பி
நிறுத்தத்திற்கு வருகிறது
திடீரென.

எம்மாதிரியான
சூழலில் இருக்கிறோம்
என்ற அறிதல் இல்லாமல்
கழுத்தில்லா எலிபோல
சாவியற்று நிற்கும்
பித்தளையின்
திறப்பு ஒன்று

நெடுந்தூர உறுதியை
கொண்டுவந்து சேர்க்கிறது
முக்கியமான தொரு
முடிவுக்கு

வாழ்நாள் முழுதையும்
வறண்டு போன
நீரடியில்
கழிக்க வேண்டி.

***

(அருண் கொலாட்கர் எழுதிய Water Supply என்ற கவிதையின் தமிழாக்கம்)

வாசல்படி

காஸ்மிக் தூசி –

அது வாசல்படி அல்ல
பக்கவாட்டில் கிடக்கும் தூண்

ஆம், தூண்தான் அது

***

ஒளிப்பட உதவி – gallivantrix.com

(அருண் கொலாட்கர் எழுதிய The Doorstep என்ற கவிதையின் தமிழாக்கம்)