.- நிமா யூஷிஜ் –
இந்தக் குளிர்காலப் பனியிரவில் ..
சூரியனின் மையத்திலும்
என் விளக்கின் தகிப்பில்லை
அனைத்தைக் காட்டிலும் பிரகாசிக்கும் என் விளக்கொளியில்
நிலவின் உறைபனி விளக்கு சோபையிழக்கிறது
அனைத்தும் உறைந்த ஓர் இரவுப் பொழுதில்
என் அண்டை வீட்டுக்காரனுக்கு நான் விளக்கேந்தி நிற்கின்றேன்
பைன் மரங்களிடையே காற்று சூறையாடியபோது
ஊமை மலைகளில் அவன் தொலைந்து போனான்.
குறுகிய பாதையை விட்டு விலகிப் போனான்,
எனினும் என் உதடுகளில் அவன் சொல்லிச் சென்ற
கதையை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்:
“விளக்கேற்றுவது யார்? தகிப்பில்ல் வாடுவது யார்?
தன் இதயத்தில் என் கதையைப் பொதித்திருப்பது யார்?”
இந்தக் குளிர்காலப் பனியிரவில் ..
சூரியனின் மையத்திலும்
என் விளக்கின் தகிப்பில்லை
நன்றி – MPT Magazine