நாட்களுக்கு இரண்டு முகங்கள்
ஒன்று பகல்
இன்னொன்று இரவு
இருண்ட திசைக்குள்ளிருந்து ஒளிரும்
பூனையின் கண்களைப் போல்
இரவு தன்னை உருமாற்றிக்கொள்கிறது
இரவைக் கண்களால் பார்ப்பதை விடவும்
காதுகளால் கேட்பது பயங்கரம் நிறைந்தது
வீட்டின் எல்லாத் துவாரங்களின் வழியேயும்
இரவு தன் இருண்ட திசைகளுக்குள்லிருந்து
ஒளிரும் பூனைக் கண்களால்
நம்மை உற்று நோக்கிக்கொண்டே இருக்கிறது
இரவின் இருப்பை காதுகளால்
எதிர்கொள்ள முடியாமல்
நாம் திணறியபடி வேறு வழியின்றி
கண்களை மட்டுமே மூடிக்கொண்டு கிடக்கிறோம்
ஜிஃப்ரி ஹாஸன்