Author: பதாகை

கவிதைகள் வேண்டி…

-அதிகாரநந்தி – 

எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை
அந்தப் பூனையைக் கூட
இன்று காணவில்லை

ஒன்றிரண்டு கரப்பான்பூச்சிகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றன
இவற்றை வைத்து கவிதை எழுத முடியும்?

துவைக்கும் இயந்திரம் கத்துகிறது
முறுக்கிப் பிழியப்பட்ட துணிகள்
ஒன்றை இழுத்தால் மொத்தமும் வருகிறது

சிக்கல்
வாழ்க்கை
நான்
மற்றவர்கள்

சில சமயங்களில் இப்படித்தான்
ஆகிறது

வாசிப்பும் விமரிசனமும்

– – கதிர்பாலா –

“புனைவு வாசிப்பின் இடைவெளிகள் – சில அடிப்படை அணுகல் குறிப்புகள்” என்ற பதிவில் சில விஷயங்கள் விடுபட்டுப் போயிருக்கின்றன என்று நினைக்கிறேன்.

“பொதுவாக ஒரு கதையோ கவிதையோ படிக்கும்போது அதைப் பற்றி நாம என்ன நினைக்கிறோம் என்பது மூன்று விஷயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன: பிடித்திருக்கிறது / பிடிக்கவில்லை, புரிகிறது/ புரியவில்லை, இதையெல்லாம் எழுதலாம்/ எழுதக்கூடாது,” என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். (more…)

ஆபோகி

 – விக்கி

கர்நாடக இசை கற்றுக் கொள்வதில் வர்ணம் ஒரு முக்கியமான கட்டம். கீதங்களில் ‘ஸ்ரீ கண நாதா’வுக்குப் பிறகு, ஸ்வர ஜதியில் ‘ராரா வேணுகோபாலா’வுக்குப் பிறகு, வர்ணத்தில் நுழைவது பயிற்சிப் பிராயத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்ட மைல்கல்.

“எத்தன வர்ணம் போட்டுருக்கு?” என்பது இசை தெரிந்த பாட்டி, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமா மாமிகள் தவறாமல் கேட்கும் கேள்வி. நீங்கள் கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னும் இந்தக் கேள்வியைத் தப்ப முடியாது.

ஐஐடியில் படிக்கும் மாணவனிடம், “உன் ப்ளஸ் டூ மார்க் என்ன?” என்று கேட்டு தெரிந்து கொள்வது போன்ற விஷயம் இது. வர்ணங்கள் அத்தனை முக்கியம். வித்வான்கள்கூட துவக்கத்தில் ஒரு வர்ணம் பாடிவிட்டுதான் கச்சேரியைத் துவக்குகிறார்கள். ஏனென்றால் மேளம் கட்ட இதுதான் உசிதம். (more…)

காய்ந்த சருகு

– எஸ். சுரேஷ் –

““Our world, like a charnel-house, lies strewn with the detritus of dead epochs.” – Le Corbusier, Urbanisme

கிணற்றில் எட்டிப் பார்க்கிறேன்
நீல ஆகாசம்
பளிச்சென்ற சூரியன்
உள்ளிருந்து எட்டி பார்க்கும் என் பிம்பம்

ஏதோ தண்ணீரில் விழுகிறது

வானம், சூரியன், பிம்பம் கலைந்து
ஒன்றாகின்றன மெல்ல மெல்ல

ஆட்டம் தணிந்து பிரிகின்றன

ஒரு காய்ந்த சருகு, மெல்ல
ஆடிக்கொண்டு ஆடிக்கொண்டு
கண்ணை மறைத்து அமர்கிறது

நீல வானம்
தகிக்கும் சூரியன்
பாசி படிந்த பழைய கிணறு
என்னைத் தழுவிச்செல்லும்

சில்லென்ற காற்று
ஒலி எழுப்பும் பறவைகள்

ஆகக்கூடிய இருண்மையின் அதியற்புத அற்ப எழுத்து – லோரி மோரின் ‘பார்க்’: ஜெஃப் டயர் நூல் மதிப்பீடு

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : எத்தனை இலை தழைகள் மற்றும் இதர வஸ்துக்கள் போட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் கனிபலைஸ் செய்வது சுவைக்காக அல்ல. கொடுஞ்சுவையாக இருக்குமென்றாலும் இதயத்தை எடுத்துத் துண்டம் போட்டுச் சாப்பிடுவது அன்னிய அடையாளத்தை அழித்து ஆற்றல்களை உட்கொள்ளவே. இத்தகைய கனிபலியங்கள் பிற மொழி படைப்புகளின் இதயத்தைக் கொணரும் நோக்கத்தில் செய்யப்படுகின்றன, சுவையின் பொருட்டல்ல.

ஊர்வலத்தில் பெய்யும் மழையாய் இருக்கும் விருப்பம் எனக்கில்லை- அதிலும், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கும் ஓர் ஊர்வலத்தில், ஒப்பீட்டளவில் அபூர்வமாய் நிகழும் ஊர்வலத்தில். ஆனால் குளிரிலும் மழையிலும் வரிசை கட்டி நின்றிருந்த அனைவரின் சார்பிலும் பேசுவதானால், ஒரு சிறு விஷயத்தைப் பதிவு செய்தாக வேண்டும். சரியாகச் சொல்வதானால் இதை ஒரு குற்றமாகச் சொல்ல முடியாதுதான், இந்த ஊர்வலத்தின் சில பகுதிகள் ஏற்கனவே இந்த வட்டாரங்களைக் கடந்து சென்றிருக்கின்றன என்பதை மட்டும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (more…)