மிகவும்
மேடுபள்ளமில்லாத
பலமாக
காற்றடிக்காத
ஓரு இடத்தை
கண்டுபிடிக்க
வேண்டும்
ஒரு கல்லின் மேல்
இன்னொரு கல்
அதற்குமேல்
மூன்றாவது கல்
என்றவாறு
அடுக்க வேண்டும்
அடுத்தகல்லை
நினைவில் வைத்து
ஒவ்வொரு கல்லையும்
எடுக்க வேண்டும்
சரியான அளவில்
சரியான எடையில்
முதல் கல்லை
சரியாக வைத்தால்
நிற்கும்
எல்லாக்கல்லும்
கடவுள்
ஆசிர்வதிக்கட்டும்
இளம்பெண்ணே
உன் சாதுர்யம் போலவே
அதிர்ஷ்டமும்
வாய்க்கும்
வீட்டுக்குப்போ
உன் கணவனுடன்
சந்தோஷம் உண்டாகி
இருக்கட்டும்
எப்போதும்.
000
அருண் கொலாட்கரின் A Little Pile of Stones என்ற கவிதை மொழிபெயர்ப்பு