சிறுகதை

குங்-பூ கற்றுக்கொள்ள சீனா சென்றபொழுது

எஸ். சுரேஷ்

என் குருவிடம் சில பாண்டாக்கள் குங்-பூ கற்றுக்கொள்வதைப் பார்த்தேன்
அவை என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயிற்சியை நிறுத்திவிட்டு
கைகளைக் கீழிறக்கி தலை குனிந்து என்னை வணங்கும்
நானும் பதிலுக்கு தலை குனிந்து வணங்கிவிட்டு பயிற்சி செய்வேன்

ஒரு மணி நேர பயிற்சிக்குப் பின் நான் என் இருப்பிடத்துக்கு வந்துவிடுவேன்
பாண்டாக்கள் பயிற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்

ஒளிப்பட உதவி- taringa.net

புது தில்லியில் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம்

 சிகந்தர்வாசி 

சகானோ மற்றும் நரூசேவுக்காக புது தில்லி விமான நிலையத்தில் இன்டர்நேஷனல் பிரிவில் எக்சிட் கேட் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமானங்கள் போல் இதுவும் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் வந்திறங்கும். அதற்குப் பிறகு அவர்கள் இம்மிக்ரேஷன், கஸ்டம்ஸ் எல்லாம் தாண்டி வெளியில் வர ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அவர்கள் ஜப்பானிலிருந்து வரும் எங்கள் வாடிக்கையாளர்கள். முதல் முறையாக இந்தியா வருவதினால் ப்ராஜெக்ட் மேனேஜரான நான் இங்கு அவர்களுக்காக அரை தூக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். (more…)

சோழி

ஹரன் பிரசன்னா

முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக்கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார். (more…)

வழியனுப்புதல்

நகுல்வசன்

ரயில் நிலயத்திற்கு தனியாக வருவது எப்போதும் போல் எனக்கு படபடப்பை அளித்தது. இதற்கான காரணம் இதுவரையில் எனக்குச் சரியாக புலப்படவில்லை. காரணங்களைப் பற்றி சிந்திக்கையில் ஏதேதோ நினைவுகள் கால வரிசையின்றி ஒரே சமயத்தில் கிளர்நதெழும். இது படபடப்பை மேலும் அதிகரிக்கும். வழியனுப்புவதறகு யாராவது கூடவே வந்தால் இம்மாதிரியான சிந்தனைகளை ரயில் கிளம்பும் வரையிலாவது ஒத்திப் போடலாம். ஆனால் இதை எல்லாம் வெளியே சொன்னால் கேலியும் சிரிப்பும்தான் மிஞ்சும். நாற்பது வயதில் ரயிலில் தனியாகப் போக பயம் என்று சொன்னால் யார் நம்புவார்கள். (more…)

ஹௌடாச் சம்பவம்

சிகந்தர்வாசி 

 

எப்பொழுதும் போல் ஹௌராஹ் (பெங்காலியில் ஹௌடா) ஸ்டேஷனுக்கு இரண்டு மணி நேரம் முன்பே வந்து விட்டேன். எப்பொழுது கல்கத்தா சென்றாலும் அங்குள்ளவர் பீதியைக் கிளப்புவார்கள். “ஹௌடா ப்ரிட்ஜி பே ஜாம் ஹோகா” என்று சிலரும், பல மணி நேரம் முன்பே கிளம்பி ட்ரைனை அவர்கள் எப்படி கோட்டை விட்டார்கள் என்று சிலரும் ஒவ்வொரு முறையும் சொல்வதுண்டு. அதனால் நான் எப்பொழுதும் ஹௌடாவுக்கு வரவேண்டும் என்றால் இரண்டு மணி நேரம் முன்பே வந்துவிடுவேன். அப்பொழுது எனக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும், ஆனாலும் இந்த விஷயத்தில் மட்டும் ரிஸ்க் எடுக்கமாட்டேன்.

ஸ்டேஷன் வந்ததும் ஒரு அறிவிப்பு காற்றில் பறந்து வந்தது. நான் செல்லவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக கிளம்பும் என்றும் அது இரண்டாவது பிளாட்பாரத்துக்கு பதில் ஐந்தாம் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பும் என்றும் அந்த அறிவிப்பு ஹிந்தியில் கூறியது.

எப்பொழுதும் போல் டிவி முன் உட்கார்ந்து கொண்டேன். கல்கத்தா ஸ்டேஷனில் எப்பொழுதும் டிவீயில் கால்பந்து போட்டி எதாவது ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். அன்று லிவெர்பூல் மற்றும் யுவேண்டஸ் அணிகளுக்கிடையே நடந்த யுரோப்பியன் கப் போட்டியின் மறு ஒலிபரப்பு. அந்தப் போட்டியை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்தப் பெண்மணி வந்திருக்க வேண்டும், கவனிக்கவில்லை. (more…)