விமர்சனம்

கவிதையின் உண்மைகள்

றியாஸ் குரானா

பதாகை – “உங்கள் கவிதைகள் எதை உண்மையாகக் கொள்கின்றன, அவை எத்தகைய உண்மைகளை வெளிப்படுத்த முனைகின்றன?”

றியாஸ் குரானா – இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு எது உங்களைத் தூண்டியது என்பதை நான் அறிவேன். நீங்கள் மட்டுமல்ல தமிழ் சூழலில் இலக்கியப் பரிச்சயம் இருக்கின்ற அனைவரும் இப்படி அல்லது இதற்கு நெருக்கமான சொற்களால் இந்தக் கேள்வியை கேட்பவர்களாகவே இருப்பர். அந்தக் கேள்விகள் இப்படி இருக்கலாம். எத்தகைய யதார்த்தத்தை வெளிப்படுத்த முனைகின்றன என்றோ எத்தகைய சூழலை பிரதிபலிக்க முனைகின்றன என்றோ இருக்கலாம். அல்லது இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்தக் கேள்வி நமது இலக்கிய பெருவெளியின் நெடுங்கால மனச்செயலாக இருக்கின்ற ஒன்றாகும். இலக்கியத்தின் பயன், இலக்கியத்தின் பணி, இலக்கியம் இயங்குவதற்கான ஒரு பொதுத் தடம் போன்றவற்றை விசாரணைக்குட்படுத்தும்போது கண்டடையப்பட்ட ஒன்றாகும். வாழ்தல் வாழ்விலிருந்து பெறுதல் என்ற ஒரு வறண்ட புரிதலில் இருந்து உருவான ஒன்றாகும். அது மாத்திரமல்ல, அந்தப் புரிதலினால்தான் இன்னும் இது காப்பாற்றப்பட்டு புழக்கத்திலிலும் இருக்கிறது. (more…)

THE GRANTA BOOK OF THE AMERICAN SHORT STORY – RICHARD FORD : ஊடுபாவுகள் 3

அஜய் ஆர்

IV பால்யத்தின் நினைவுகளும் பதின் பருவ அலைகழிப்புக்களும்

oates-child

ஜோய்ஸ் கரோல் ஓட்ஸின் (Joyce Carol Oates) ‘Where is Here’, சிறுகதை, ஒரு அந்நியன் மாலை வேளையில் வீட்டின் அழைப்பு மணியை அழுத்துவதுடன் ஆரம்பிக்கிறது. நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் அந்த அந்நியன் தன்னுடைய 11ஆம் வயதில் இந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பிறகு தன் தாய் இந்த வீட்டை விற்றபிறகு இப்போதுதான் இந்த பக்கம் வந்ததால் வீட்டைப் பார்க்கலாம் என எண்ணி வந்ததாகவும் கூறி, வீட்டின் வெளிப்புறத்தில் மட்டும் சிறிது நேரம் இருக்கட்டுமா என அனுமதி கேட்கிறான். கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது அந்த வீட்டில் வசிக்கிறார்கள். கணவன் அந்நியனை வீட்டின் வெளியே சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கிறார்.

ஓட்ஸ் மனைவியின் மூலம் மனித மனம் சட்டென்று பல்வேறு ஒன்றுக்கொன்று நேர்மாறான நிலைப்பாடுகள் எடுப்பதைக் காட்டுகிறார். முதலில் அந்நியனை அனுமதித்ததைக் குறித்து கணவனை கடிந்து கொள்கிறார் மனைவி, அவன் கொலைகாரனாகவோ, திருடனாகவோ இருக்கலாமே என்கிறார். (“Isn`t that just like you!” என்று தன் சலிப்பை வெளிப்படுத்துகிறார்) வெளியில் அந்த அந்நியன் என்ன செய்கிறான் என்று பார்க்கும் கணவன், அவன் அங்குள்ள ஊஞ்சல் அருகில் செல்வதைப் பார்த்து அவன் குழந்தையாக இருக்கும்போது அதில் விளையாடி இருக்கக்கூடும் என்கிறார். இப்போது மனைவி சட்டென்று அவனை உள்ளே அழைக்கும் மனநிலைக்கு சென்று, அவனை அழைக்காத கணவனை மீண்டும் கடிந்து கொள்கிறார் (மீண்டும் “Isn`t that just like you!“)!!!. அந்நியன் வீட்டிற்குள்ளும் அனுமதிக்கப்படுகிறான். (more…)

கவிதையும் வாசக மனநிலையும்

றியாஸ் குரானா

கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டதென்று கருதுகிறீர்கள்?

கவிதைக்கும் வாசகருக்குமிடையிலான உறவு என்பது எப்போதும் முரண்பாடானதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். வாசகன், கவிதைப் பிரதியோடு போராடி முடிவற்ற ஒரு வினையை செயலுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் விரும்புபவன்.

இலக்கியப் பிரதிகள் தம்மிடம் ஏதோவொரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது என நம்பும் ஒவ்வொருவரும் முதலில் வாசகராக மாறிவிடுகிறார். அடுத்ததுதான் இலக்கியப் பிரதியோடு எப்படி வினையாற்றுவதென்ற விசயமாகும். இலக்கியப் பிரதிகள் அதனதன் இயல்பிலேயே பெரும்பாலும் மறைமுகமாக எதையோ பேசுவதாகவே இருக்கும். அதிலும் கவிதைப் பிரதி கொஞ்சம் ஆழமாக இதை செய்துவிடும். அப்படிச் செய்வதினூடாகத்தான் தன்னை அது கவிதைப் பிரதியாக தக்கவைத்துக்கொள்கிறது. இலகுபடுத்தி இதை விபரிப்பதென்றால், சூழலில் சாதாரணமானது என கருதப்படும் ஒரு விசயத்தை நாம் இதுவரை சந்தித்திராத அசாதாரணமான ஒன்றாக மாற்றி உருப்பெறச் செய்வதுதான் கவிதைப் பிரதி. இது மிக அடிப்படையான ஒன்று. இதை விரிவாக பின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவோம். யதார்த்தத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாக கவிதைப் பிரதி நெடுங்காலமாக இங்கு பயிலப்படுகிறது. அதன் மீது பெரும் விமர்சனம் எனக்குண்டு. (more…)

அர்ஜுனன் காதல்கள்- வாசகர் எதிர்வினை

ரத்ன பிரபா

“என் உச்சந்தலை நிஜமாகவே திறந்து கொண்டது போலிருக்கும்போது, அதுதான் கவிதை என்பது புரிந்துவிடுகிறது,” என்றார் எமிலி டிக்கின்சன். கவிதை எழுதுவதற்குத் தகுந்த கருப்பொருள் தேடிச் செல்ல மகாபாரதத்தை விடவும் சிறந்த, நிரம்பி வழியும் கொதிகலன் எது இருக்க முடியும் – எத்தனை வடிவங்கள் இருந்தாலும், எத்தனை கோணங்கள் வெளிப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும், பல பத்தாயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பின்னும், தன் புத்துயிர்ப்பையும் அழகையும் தக்க வைத்துக் கொண்டுள்ள உலகின் மாபெரும் காவியமல்லவா அது!

ஊர்வசி, உலூபி, உத்தரை, சுபத்திரை: அர்ஜுனன் வாழ்வில் புகுந்த நான்கு வெவ்வேறு பெண்களுடனான அவனது உறவுகள் குறித்த நான்கு பகுதிகளாக கவிதைத் தொடர் ஒன்று எழுதப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்டதும், இவர்களைக் காட்டிலும் புகழ்பெற்ற திரௌபதியை விடுத்து இந்த நால்வர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று யோசித்தேன். இதில் சிந்தனைக்குரிய இன்னொரு விஷயம், சுபத்திரையின் தேர்வு – மற்ற மூவரோடு ஒப்பிட்டால் இவள் மரபு சார்ந்த துணை உறவானவள். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கவிதைகளை வாசிக்கத் துவங்கினேன். ஒவ்வொரு காதலும் கவிஞரின் மனதினூடே விவரிக்கப்படும்போது நான்கு பெண்களின் சித்திரமும் கவிதைகளின் மையத்திலுள்ள கிருஷ்ணன் இறுதி அடிகளில் வருவதும் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடுத்தடுத்த கவிதைகளிள் அடைவதைக் கண்டுணர முடிந்தது. (more…)

THE GRANTA BOOK OF THE AMERICAN SHORT STORY – RICHARD FORD : ஊடுபாவுகள் 2

அஜய் ஆர்

III- எல்லைகளைச் சிதைக்கும் கணங்கள்

ahaslett100208_250

மென்காற்று வீசும், வெப்பம் சற்று அதிகமாக உள்ள சோம்பலான ஒரு ஞாயிறன்று அக்கா- தம்பியான ஓவன் (Owen)/ ஹிலரியை (Hillary) ஆடம் ஹேஸ்லெட்டின் ‘Devotion’ சிறுகதையின் துவக்கத்தில் முதல்முறையாக காண்கிறோம். காலத்தில் முன்பின்னாகச் செல்லும் கதையில், ஐம்பதுகளில் இருக்கும் இருவரின் வாழ்வு பற்றி கொஞ்சம் தெரிய வருகிறது. தற்பாலின விழைவு கொண்ட ஓவன், தன் இணைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பதைக் கண்டு, கடந்த பல ஆண்டுகளாக எந்த உறவுமின்றி இருப்பவர். திருமணமாகாத ஹிலரி ஆசிரியையாக இருக்கிறார். பல ஆண்டுகளாக ஒன்றாக இருக்கும் இருவரின் வாழ்க்கை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடை/ நல்ல காலை உணவு, குளிர்காலத்தில் குளிர் போக்கின் கணப்பறை (hearth) முன் உட்கார்ந்து நாளிதழ் படிப்பது, திரைப்படத்திற்கு செல்வது, கோடை/ வசந்த காலங்களில் தோட்டத்தில் நேரத்தை செலவிடுவது என ஒரே தாளகதியில் செல்கிறது.

நிச்சலனமான நீர்நிலை போல் அவர்கள் வாழ்க்கை இருந்தாலும் நீர்நிலையின் ஆழத்தை அறிவது யார்? “They weren’t unhappy people,” என்று குறிப்பிட்டு அவர்கள் வாழ்வு குறித்த தெளிவின்மையை வாசகன் மனதில் உருவாக்குகிறார் ஹேஸ்லெட். மந்தமாகச் செல்லும் ஞாயிறு அன்று யார் வருகைக்காக தடபுடலாக இரவு உணவை ஏற்பாடு செய்கிறார் ஹிலரி, என்று கதையை வாசிக்கையில் பென் என்பவர் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்களை சந்திக்க வருகிறார் என்று தெரிய வருகிறது. தன் அறைக்கு செல்லும் ஓவன், தன் சகோதரி ஹிலரிக்கு பென் முன்பு அனுப்பி, தான் மறைத்து வைத்துள்ள பழைய கடிதத்தைப் மீண்டும் படிக்கிறார். (more…)