மொழியாக்கம்

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது…

வண்ணக்கழுத்து பகுதி 8: பயணம் தொடர்கிறது

”உழவாரக்குருவிகளின் கட்டிடக்கலைத் திறமையை உங்களுக்குத் தெளிவாக விளக்க, முதலில் அதனுடைய குறைபாடுகளைச் சொல்லிவிடுகிறேன். பறக்கும் பூச்சிகளைப் படிப்பதற்கு ஏதுவாக சிறிய அலகு கொண்டவை அவை. அதனுடைய அகலமான வாய், பறக்கும் போது இரையைப் பிடித்துக் கொள்ள ஏதுவாக இருக்கிறது. பூச்சிகளை நோக்கி அது பாயும்போது, வெகு சில பூச்சிகள் மட்டுமே தப்ப முடியும். உழவாரக் குருவி மிகச் சிறியதாக இருப்பதால், அதனால் அதிக எடையைத் தூக்க முடியாது. அதன் கூடு, வைக்கோல், சற்றே பெரிய ஊசியைப் போன்ற தடிமனுள்ள சுள்ளிகளைப் போன்ற இலகுவான பொருட்களால் கட்டப்பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

“முதன் முறை நான் உழவாரக் குருவியைப் பார்த்தபோது, முடங்கிப் போய் உருக்குலைந்தது போல் இருந்தது. தங்களுடைய கால்கள் மோசமானவை என்று எல்லா உழவாரக் குருவிகளுக்குமே தெரியும். சமநிலைப் படுத்திக்கொள்ளக் கூட அந்தக் கால்கள் போதாது. அதனுடைய உடம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும், மீன்பிடி கொக்கிகள் போன்ற கால்கள், இடங்களைப் பற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. சின்னச் சிறிய கொக்கிகள் போன்ற அதன் கால் நகங்கள் வளைந்து கொடுக்காதவை. அதனுடைய உடம்புக்கும் பாதங்களுக்கும் இடையே போதுமான நீளத்தில் கால்கள் இல்லை. இதனால், நீண்ட கால்கள் மற்ற பறவைகளுக்குத் தரும் குதிக்கும் திறன் உழவாரக் குருவிகளுக்கு இல்லை. இந்தக் குறைபாடு மற்றொரு சாதகத்தால் அடிபட்டுப் போகிறது. அவற்றால், கற்களால் அமைக்கப்பட்ட வேலிகளிலும், பளிங்கு இறவானங்களிலும், வீடுகளில் பளிங்குக் கல்லில் கூரைக்குக் கீழ் செதுக்கப்பட்ட அலங்காரங்களிலும், மற்ற எந்த பறவையைக் காட்டிலும் ஒட்டிக் கொள்ள முடியும். என் நண்பனான உழவாரக் குருவி, பளபளப்பான சுவர்களில் கூட ஏதோ சொறசொறப்பான மேற்பரப்ப போல தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (more…)

இனியெதை விற்பது?

விஜயலக்ஷ்மி

இக்கவிதையின் மலையாள மூலத்தை இங்கு வாசிக்கலாம்.

 

இனியெந்து வில்குவான்

புழயெ, காற்றினெ, வெயிலினெ வில்கான்
மழயெ மண்ணின்றெ தரிகலெ வில்கான்

பதினாலாம் ராவின்றெயழகினெ வில்கான்
புலரிதன் சப்த ஸ்வரங்களெ வில்கான்

அவர் விளிக்கயாய் ..வரிக லோகத்தின்
பெருமடீசீலதலவரே ..நீல –
மலகள் நிங்ஙள்க்கு குழிசெடுக்குவான்
ஹரித வ்ருக்ஷங்கள் பிழுதெடுக்குவான்

மகரவும் மண்ணும் குளிரும் நிங்கள்க்கு
மறன்னு போகாதெ பொதிந்தெடுக்குவான்
அலக்கிதேச்ச வெண்சிரியுமாய் நாடு
முறிச்சு வில்க்குவான் கொதிச்சு நில்ப்பவர்

விளிச்சு கூவுன்னு.. நுறுக்கு கேரளம்
முறிச்செடுக்குகீ கஷாப்பு கத்தியால்
இனி வில்கானுங் திரிச்சறியலின்
துறுப்பு சீட்டொன்னு கழுத்திலிட்டவர்
இறச்சிக்கும் வேங்தொட்டவர் ..ஷதகோடி
அவரே தாங்குவான் வருவதாரினி?

இனியெதை விற்பது

ஆற்றை, காற்றை, வெயிலை விற்க
மழையை மண்ணில் விளைபவகளை விற்க

பதினான்காம் காலையின் அழகினை விற்க
விடியலின் ஏழு சுரங்களை விற்க

அவர்கள் அழைக்கிறார்கள்… வருக உலகத்தின்
பெரும் பணப்பை கொண்டவர்களே… நீல –
மலைகளை நீங்கள் இல்லாமலாக்க
பசுமையான காட்டுமரங்களை பிடுங்கிப் போட

மீனும், மண்ணும், குளிரும் உங்களுக்கு
மறந்து போகாமல் பொதிந்து எடுத்துக் கொள்ள
வெளுத்துத் தேய்த்த வெண்சிரிப்போடு
நிலத்தை வெட்டி விற்க விரும்புவர் நிற்கிறார்

கூவி அழைக்கிறார்கள்…..சின்ன கேரளத்தை
வெட்டியெடுக்கிறார் கசாப்பு கத்தியால்
இனியும் விற்பதற்கு இருக்கிறது, அடையாளத்திற்காய்
துருப்பு சீட்டினைக் கழுத்திலிட்டவர்
இறைச்சிக்கும் ஆகாதாவர்…. நூறுகோடி
அவரை வாங்க யார் வருவார் இனி?

“நான் எழுத்தைக் கொண்டு யோசிக்கிறேன்”- ரிச்சர்ட் ரூஸோ – சில நேர்முகங்கள்

பீட்டர் பொங்கல்

ரிச்சர்ட் ரூஸோவின் அண்மைய நூல், “Elsewhere” என்ற தன்வரலாற்று படைப்பு. இது குறித்து, “கடந்த பல ஆண்டுகளில் மிகவும் நேர்மையான, நெகிழ்ச்சியான அமெரிக்க நினைவு நூல்களில் இது ஒன்று”, என்று குறிப்பிடுகிறார் மிகேல் ஷ்வாப் http://www.npr.org/2012/11/16/163952390/elsewhere-has-beauty-but-no-happy-ending.

டெய்லி பீஸ்ட் தளத்தில் ஜேன் சியாபட்டாரியுடனான நேர்காணலின்  இந்த நூலில் வரும் விஷயங்களைப் பேசுகிறார் ரிச்சர்ட் ரூஸோ. அவற்றின் சில பகுதிகள் இங்கு:

நீங்கள் எல்ஸ்வேர் எழுதக் காரணமாக இருந்தது எது?

கிராண்டாவில் பதிப்பாசிரியராக இருக்கும் ஜான் ஃப்ரீமன் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கிறார். வீடு திரும்புதல் பற்றிய ஒரு இதழ் தொகுக்கும் திட்டத்திலிருந்தார் அவர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் க்ளோவர்ஸ்வில் செல்லும் வழிகாட்டிக் குறியைப் பார்த்திருக்கிறார். மெய்யுலகில் உள்ள அந்த இடத்தைப் பற்றி நான் எழுதினாலும் எழுதக்கூடும் என்ற எண்ணத்தில் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். இதுவரை பல்லாண்டுகளாக நான் அதன் புனைவு அவதாரங்களைதான் பயான்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் நான் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருந்தேன். என் அம்மா அப்போதுதான் இறந்திருந்தார். அம்மாவின் வாழ்வும் சாவும், க்ளோவர்ஸ்விலுடன் எங்களுக்கு இருந்த ஆழ்ந்த உறவு, எனக்கும் என் அம்மாவுக்கும் பொதுவானவையாக எவ்வளவு விஷயங்கள் இருந்தன என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜான் என்னை அழைத்தார். எங்கள் பிறப்பு (நாங்கள் இருவருமே அப்சஸிவ்வான ஆட்கள், என் அம்மா அளவுக்கு நானுமே மனசில் ஒன்று தோன்றிவிட்டால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவனாக இருக்கிறேன்), எங்கள் வளர்ப்பு (நாங்கள் இருவருமே காலம் தொடாத சிற்றூர் ஒன்றில் வளர்ந்தவர்கள்). அந்த சமயம் பார்த்து ஜான் என்னை அழைத்திருக்காவிட்டால், நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு அவ்வளவு அதிகம் ஏற்பட்டதில்லை. இந்தப் புத்தகம் இப்படிப்பட்ட உணர்வுகள் அத்தனையையும் தணித்திருக்க வேண்டும். (more…)