Author: பதாகை

தத்துவ விசாரணை

எஸ்.சுரேஷ்

 

“ஆரம்பிக்கலாமா?
“பொறு பெரியவர் வரட்டும்” என்றது அந்த ஓநாய்.
மெதுவாகக் குன்றின் மேல் ஏறி வந்தது,
தளர்நடையுடன் ஒரு கிழ ஓநாய்.
“ஆரம்பிப்போம்” என்று சொல்லிவிட்டு,
நிலவைப் பார்த்து, “ஊஊஊஊஊஊஊ,” என்று ஊளையிட்டது.
மற்ற ஓநாய்களும் கூடச்சேர, காடு முழுவதும் ஊளை.
“போதும்யா, எவ்வளவு நேரம் கத்தறது?” என்று கிழ ஓநாய் சொன்னவுடன்
ஊளை நின்றது
குன்றை விட்டு ஓநாய்கள் இறங்கிக் கொண்டிருக்க
குட்டி ஓநாய் ஒன்று மேலே ஓடிவந்தது.
“முடிஞ்சுதா?”
“ஜோலி முடிஞ்சு. வேட்டையாடப் போறோம்,” என்று சொல்லிவிட்டு
எல்லா ஓநாய்களும் சென்றுவிட்டன
தனியாக விடப்பட்ட குட்டி ஓநாய் துக்கம் தொண்டையடைக்க,
நிலவைப் பார்த்து “ஊஊஊஊஊஊஊ” என்று ஊளையிட்டது.
ஆனால், அதன் துக்கம் யார் காதிலும் விழவில்லை.

00

ஒளிப்பட உதவி – dogzer

மகரந்த்

  காஸ்மிக் தூசி


என்னது?
சட்டையை
கழற்றிவிட்டு
பூஜை செய்ய
போகவா?
நன்றி வேண்டாம்.

என்னால் ஆகாது
நீங்கள் விரும்பினால்
தாராளமாக போகலாம்.

போகும் முன்
தீப்பெட்டியை தருகிறீரா?

புகைத்தால்
யாரும்
பொருட்படுத்தாத
முற்றத்தில்
வெளியே
இருக்கிறேன் நான்.

000

அருண் கொலாட்கரின் Makarand என்ற கவிதை மொழிபெயர்ப்பு

நட்சத்திரங்களின் அற்புதம் உனக்கும் இவ்வுலகில் கிடைக்கட்டும்

சீன கவிஞர் யீ லூ (தமிழாக்கம்-  பாஸ்டன் பாலா)
கைபேசியில் இருக்கும் அவனின்
கண்களில் களிப்பு 
கீழே பாயும் பெரும்பறவையின்
கொம்மையில் களிப்பு 
பூந்தொட்டியில் மலர்ந்திருக்கும் சூரியகாந்தியின்
ஒவ்வொரு இதழின் இருதயத்திலும் களிப்பு 
 
தன் பிஞ்சு இலைகளை மனோரஞ்சித மரம் உதற
அதிலும் ஆணிவேரில் இருந்து சுரக்கும் ஒரு களிப்பு இருக்கும்       
 
தன் பிஞ்சு இலைகளாடும் மனோரஞ்சிதத்தின்
ஆணிவேரில் களிப்பு சுரந்தவாறிருக்க வேண்டும்     
தலை புதைத்துத் தன் பாதையில் விரையும் லாரி
களிப்பை அடக்கிக் கொள்ளும்
தன் இலக்கைச் சேர்ந்தபின் விடுவிக்கக் காத்திருக்கும்
ஏற்புக் கடிதம் பெற்ற பெண்
களிப்பை இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்
தழுவலில் அது வெடித்துச் சிதறலாம்
 
ஒவ்வொன்றாகப் பதிவு செய்கிறேன்
யாருக்குத் தெரியும்  எனக்குரியது என்று
பிறவற்றுக்கு இணையாய் கிடைக்குமென்று
 
இன்னும் பதிவேன், இன்னும்
நட்சத்திரங்களின் அற்புதம் உனக்கும் இவ்வுலகில் கிடைக்கட்டும்
உனக்கும் களிப்பு கிட்டட்டும்
000
(சீன கவிஞர் யீ லூ (Yi Lu – 伊路 ) 1956ல் பிறந்தவர். நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் அரங்க வடிவமைப்பாளராகவும் இயங்குகிறார். நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பார் (See – 《看见》 – 2004) மற்றும் இரு கடல்களை உபயோகித்து (Using Two Seas – 2009) ஆகியவை விருதுகள் பெற்றிருக்கின்றன. நூறு மலர்கள் விருது, ஃபூஜியான் மாநிலத்தின் இலக்கிய பரிசு ஆகியவையும் வென்றிருக்கிறார்.)
ஒளிப்பட உதவி – Starts with a Bang

அமேஸான் காடுகளிலிருந்து- 6: ஆவி சூழ் உலகம்

மித்யா 

அத்தியாயம் 6 – ஆவி சூழ் உலகு

“உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்” என்று ஆரம்பித்தான் அந்த இந்தியன். நடுநிசி நேரம். வானத்தில் பல ஆயிரம் நட்சத்திரங்கள். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. பூச்சிகளின் இடைவிடாத ஒலி. காட்டுக்குள்ளிருந்து மிருகங்களின் ஊளை. மேலே எழும்பும் அக்னி ஜ்வாலைகள் இருட்டுடன் போராடிக் கொண்டிருந்தன.

அந்த இந்தியன் நெருப்பின் முன் உட்கார்ந்து தீப்பிழம்பின் ஒளியில் மிளிரும் கிறிஸ்டோவையும் ஆலிஸ்சையும் பார்த்தான். அவர்கள் இன்னும் சிவப்பாக தெரிந்தனர். அவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.

“ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். இல்லை இல்லை. இன்னும் இருக்கிறார். அவனுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகள் பிறந்தாள். குழந்தையே இல்லாத ராஜா ராணிக்கு மகள் பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் இந்த வரவை எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.

அந்த மகள் ஒரு அழகான ராஜகுமாரியாக மாறினாள். புற அழகு மட்டுமல்ல. அவள் அகமும் அழகாக இருந்தது. யாருக்கும் தீங்கு நினைக்காத ஓர் இளவரசியாக அவள் இருந்தாள். எல்லோருடனும் ஒரு சாதாரண பிரஜை போல் பழகினாள். முதலில் ராஜாவிற்கும் ராணிக்கும் இது பிடிக்கவில்லை. “என்ன இது. இளவரசி என்றால் சும்மாவா? கை அசைத்தால் ஆட்கள் ஓடி வரவேண்டும். கண் சைகையில் எல்லா வேலையும் முடிய வேண்டும். இவளோ இப்படி எல்லோருடனும் சரிக்கு சமமாக பழகுகிறாளே?” என்று ராணி ராஜாவிடம் வருத்தப்பட்டுக்கொண்டாள். ராஜாவும் இளவரசியின் பழக்க வழக்கங்களை மாற்ற பல ஆசிரியர்களை நியமித்தார். ஆனால் இளவரசியோ ஆசிரியர்களுக்கு தக்க மரியாதை செய்தாலும் அவர்கள் சொல்லிக் கொடுத்த எதையும் கடைபிடிக்கவில்லை. எப்பொழுதும் போல் எல்லோருடனும் ஆடிக் கொண்டிருந்தாள். (more…)

மரணித்தல் – டெப் ஓஃபின் உன்ஃபர்த்

(Gigantic எந்த தளத்தில் Deb Olin Unferth எழுதிய சிறுகதையின் தமிழாக்கம்)

அவன் எழுதினான். தோழி இறந்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னான். இவை அவளது இறுதி நாட்கள் என்றான், இது எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவன் நினைத்ததாகச் சொன்னான். நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அவளைப் பார்த்து பல யுகங்கள் ஆகியிருந்தன. ஆனால் எப்போதும் அவளை நாங்கள் நேசித்தோம், அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அவளுக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டிருந்தோம் (சில மாதங்களுக்கு ஒரு முறை அவளது உடல்நலம் குறித்து அவன் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்)- அவள் உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்தது. நாங்கள் பயணம் செய்யத் திட்டமிட்டோம் அல்லது, அவளைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்களாவது எங்களுக்கு இருந்தன. அவள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள் என்பது சென்ற ஆண்டு எங்களுக்கு முதன்முதலாய் தெரிய வந்தபோது காரை நிரப்பிக்கொண்டு அவளைப் பார்ப்பதற்கான நான்கு மணி நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தோம். பழைய நாட்களைப் போல் அவள் வீட்டின் முன் அறையில் தங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தோம், ஆனால் அதைச் செய்யவில்லை. ஓராண்டு காலம் அதையே சொல்லிக் கொண்டிருந்தோம், “சீக்கிரம் கிளம்புவோம்,”. அவள் உடல்நிலை இன்னும் மோசமானது. அவன் எழுதும்போது, தொலைபேசியில் அழைத்தாவது பேசலாமே என்றான், கொஞ்சம் நட்பாக நாலு வார்த்தைகளை அவளுக்குச் சொல்லலாம். ஆனால் எங்களுக்குப் பேசச் சங்கடமாக இருந்தது, என்ன பேச முடியும் என்று தெரியவில்லை. “புதுப்பித்துக் கொள்ளலாம்”, என்று நினைத்தோம். ஆனால் அவள் உடல்நிலை அவ்வளவு மோசமாக இருப்பதைப் பார்க்கும்போது எங்கள் அன்றாட விவகாரங்கள் மிகவும் அற்பமாகத் தெரிந்தன. ஒரு மின்மடலாவது அனுப்பலாம் என்று நினைத்தோம். புகைப்படம் ஒன்றை இணைக்கலாம், ஆனால் அதையும் செய்யவில்லை. அதன்பின் அவன் எழுதும்போது அவள் விமானத்தில் டெக்சாஸ் செல்லப் போகிறாள் என்றான், அவளது உடலெங்கும் கீமோ நிறைத்து அகற்றப் போகிறார்கள். சோதனை முயற்சியாய் ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போவது குறித்துச் சொன்னான். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம், ஓர் இழப்பை உணர்ந்தோம், எனினும் ஒன்றும் செய்யவில்லை. (more…)